Zomato டைம்பாஸ்
Lifestyle

Zomato : பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்தவருக்கு நிகழ்ந்த பரிதாபம் - கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இதேபோல் எனக்கும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார். "Happy Birthday Arun - Font Italics" என்து குறிப்பிட்டதை அப்படியே கேக்கில் எழுதியதாக அவர் பதிவிட்டார்.

டைம்பாஸ் அட்மின்

பேக்கரி ஊழியரின் தவறான புரிதலால் பிறந்தநாள் சர்பிரைஸ் நகைச்சுவை நிகழ்வாக மாறி இருக்கிறது.

மும்பையில் அமைந்துள்ள பேக்கரியில் இருந்து Zomoto மூலமாக கௌரவ் என்பவர் தனது நண்பரான ஈஷா என்பவருக்கு கேக் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். Zomato செயலியில் 'கேக்'கில் என்ன மாதிரியான வார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று தெளிவாக விளக்கியும் இருக்கிறார். இருப்பினும் பேக்கரி ஊழியர் அதை தவறாக புரிந்துக் கொண்டதால் தன் நண்பருக்கு சர்பிரைஸ் கேக் கொடுக்க நினைத்து ஆர்டர் செய்தது நகைச்சுவை நிகழ்வாக மாறி இருக்கிறது.

ஈஷாவுக்கு பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்யும் போது கௌரவ், "கேக்குடன் ஒரு மெழுகுவர்த்தியை அனுப்புங்கள். 'ஹேப்பி பர்த்டே ஈஷா' என்று எழுதுங்கள் அல்லது முடிந்தால் பிறந்தநாள் வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு கீழ்  'ஈஷா'  என்று எழுதுங்கள்" என்று பேக்கரி ஊழியர்களுக்கு ஆங்கிலத்தில் கெளரவ் zomato செயலியில் குறிப்பிட்டிருந்தார்.

இதை தவறாக புரிந்துக் கொண்ட பேக்கரி ஊழியர் பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டிக்கரை ஒட்டி அதற்கு கீழ் கௌரவ் குறிப்பிட்ட Isha' if possib' என்பதை அப்படியே அந்த கேக்கில் எழுதி அனுப்பு வைத்திருக்கிறார்.

இந்நிகழ்வினை தனது X தளத்தில் பதிவிட்ட கௌரவ், "ஹாய் Zomato, தயவு செய்து வார்த்தைகளின் எண்ணிக்கை வரம்பை அதிகரிக்கவும்" என்று கோரிக்கை விடுத்தார்.

பதிவிட்ட சில நிமிடங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து பதிவு செய்து வருகிறார்கள். "Isha if possibl" என்பதில் If என்பதை ஏன் எழுதவில்லை என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் If என்பது "Isha Possibl" என்ற பெயரின் இடைப்பெயராக இருக்கும் என நினைத்து பேக்கரி ஊழியர் தவிர்த்து இருக்கலாம் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

இதேபோல் எனக்கும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்று ஒருவர் கமெண்ட் செய்து இருக்கிறார். "Happy Birthday Arun - Font Italics" என்து குறிப்பிட்டதை அப்படியே கேக்கில் எழுதியதாக அவர் பதிவிட்டார். கௌரவின் பதிவிற்கு பதிலளித்த Zomato நிறுவனம், "இது குறித்து தொழில்நுட்ப குழுவிடம் பேசுகிறோம்" என்று தெரிவித்தது.

- சா.முஹம்மது முஸம்மில்.