AC SHIRT | வெயிலை சமாளிக்க ஏசி சட்டை! Timepass
Reactions

AC SHIRT | வெயிலை சமாளிக்க ஏசி சட்டை!

இந்த சட்டையின் எடை ஒரு செல்போனை விட கம்மியாம்.

Zulfihar Ali

வேகாத வெயில்ல ஜாலியா வெளியே போறதுக்கு இப்போ புதுசா ஒரு சட்டை கண்டுபிடிச்சிருக்காங்க. அதுல அப்படியென்ன ஸ்பெஷல்னுதானே கேக்குறீங்க அது சாதா சட்டை இல்ல பாஸ் ஏசி சட்டை. இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த சட்டையை அணிந்து வெளியே சென்றால் வெயிலுக்கு சும்மா குளுகுளுனு இருக்குமாம்.

இந்த சட்டைக்கு ‘ரியான் பாக்கெட்’ பேர் வெச்சிருக்காங்க. இந்த சட்டையின் எடை ஒரு செல்போனின் எடையை விட கம்மியாம். சார்ஜ் தீர்ந்து போனால் மீண்டும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையில் இதை வடிவமைச்சிருக்காங்க

2 மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் 90 நிமிடங்கள் வரை இந்த சட்டையில் உள்ள ஏசியை பயன்படுத்த முடியும். இந்த சட்டையின் விலை 5,947.63 ரூபாயா நிர்ணயிச்சிருக்காங்க. இர்பான் வியூ ஸ்டைல்ல சொன்னா வாங்குறோம் இந்த சட்டையை வாங்கியே ஆகுறோம்

-ஜுல்பிஹார் அலி