திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, பின்னர் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.
ஆளுநர் வருவதற்கு முன்பிருந்தே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் ஆளுநர் வருவதற்கு முன்பு, அவர் வருகையை எதிர்த்து 'இந்தியா' கூட்டணியை சார்ந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
அதை எதிர்த்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். அப்பொழுது காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பின் பாஜகவினர் சுமார் 1 கிலோ மீட்டருக்கு தேசிய கொடியை ஏந்தி பாதயாத்திரையாக வந்து பழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆளுநர் வரும் பாதையில் வரிசையாக நின்று "வரவேற்கின்றோம் வரவேற்கின்றோம் ஆளுநர் ஆ.என் ரவியை வரவேற்கின்றோம்" என்று கோஷங்களை எழுப்பியும், தேசியக்கொடிகளை அசைத்தும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.
- மோ.நாக அர்ஜுன்.