Karnataka Karnataka
அரசியல்

Karnataka : கர்நாடக முதல்வருக்கு எதிராக மனு தாக்கல்! - தேர்தல் மன்னன் பத்மராஜனின் அதிரடி!

மனு தாக்கல் செய்யறதுக்கு மட்டும், இதுவரைக்கும் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எனக்கு செலவாகி இருக்கு. என்ன பத்தி செய்திகள் வர்றது ஒரு 'கிக்கா' இருக்கு.

டைம்பாஸ் அட்மின்

தமிழகம், கர்நாடகா ஆந்திரானு எங்க தேர்தல் நடந்தாலும், நம்ம சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த, 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிரா மனு தாக்கல் செய்வத வாடிக்கையா வச்சிருக்காரு. இந்த நிலையில, மே10ம் தேதி கர்நாடகா மாநிலத்தில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்குது. 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கிய நிலைமையில, தற்போதைய பா.ஜ.க முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடுற, சிக்கான் தொகுதியில, 'தேர்தல் மன்னன்' மனு தாக்கல் செய்திருக்காரு.

'ஒரு கோடிப்பு...!'

மனுதாக்கல் குறித்து நம்ம கிட்ட பேசுன, தேர்தல் மன்னன் பத்ம ராஜன், "சார், பஞ்சர் கடை தான் என் தொழில். 1988ல் மனு தாக்கல் செய்வத தொடங்கி, இன்றோட, 234வது முறையா மனு தாக்கல் செய்திருக்கேன். பல காரணங்களால எப்படியும் என்னோட மனுவ தள்ளுபடி செய்திருவாங்க. இருந்தாலும் 'கவுண்டுக்காக' மனுத்தாக்கல் செய்திட்டு இருக்கேன்.

ஆரம்பத்துல சும்மா விளையாட்டா தொடங்கினேன், இப்ப எந்த தேர்தல் வந்தாலும் அதுல மனு தாக்கல் செய்யறதும், என்ன பத்தி செய்திகள் வர்றதும் ஒரு 'கிக்கா' இருக்கு. மனு தாக்கல் செய்யறதுக்கு மட்டும், இதுவரைக்கும் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எனக்கு செலவாகி இருக்கு.

கர்நாடகா மாநிலத்துலயே மொத ஆளா, முதல்வர் வேட்பாளருக்கு எதிரா மனு தாக்கல் செய்தாச்சு. அவ்ளோதான் சார் வேலை முடிஞ்சுது. இப்ப விஷூக்கனி கொண்டாட சபரிமலைக்கு பேறேன்," என, 'வர்ட்டா...' என்பது போல் பதிலளித்து போனை துண்டித்தார்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான 'ஹாப்பி', இவருக்கு மனு தாக்கல் 'ஹாப்பி'...

- ச.பிரசாந்த்.