எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுக்குழு
அரசியல்

'ஓ.பன்னீர் செல்வம் - ஒரு சிறுகுறிப்பு வரைக' : எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்.

கொட்டாச்சி

List out the disadvantage of ஓ.பன்னீர் செல்வம்?

எடப்பாடி பழனிசாமி: கழகத்தை காக்கக்கூடிய நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். சில எட்டப்பர்கள் கழகத்திலிருந்துகொண்டு கலகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அண்ணன் பன்னீர்செல்வம் குறித்த ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசியபோது, அது தொடர்பாக அவரது வீட்டுக்கு தொடர்ந்து சென்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

ஒற்றைத் தலைமையின் தேவை குறித்துப் பேசினார்கள். அவர் அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கூறினார். எங்கே நீங்கள் விசுவாசமாக இருந்தீர்கள்? ஓ.பி.எஸ், தான் நிறைய விட்டுக் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால், நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம்.

ஓ.பன்னீர் செல்வம்

அவர் என்ன விட்டுக் கொடுத்தார். எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்.

Tell me about Yourself?

எடப்பாடி பழனிசாமி: 1974-ல் ஒரு கிளைச் செயலாளராக கட்சியில் சேர்ந்தேன். பின்னர் ஜெயலலிதா அணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அம்மா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவி தந்தார்.

எடப்பாடி பழனிசாமி

அந்த பணியை சிறப்பாக செய்ததால் கூடுதலாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் எனக்கு வழங்கினார். எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தினேன்.

ஓ.பி.எஸ், தான் நிறைய விட்டுக் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால், நான்தான் விட்டுக் கொடுத்தேன்.

எடப்பாடி பழனிசாமி

அவர் என்ன விட்டுக் கொடுத்தார். எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை.