Salem javvarisi Timepass
அரசியல்

Salem Geographical Indication: ஜவ்வரிசிக்குக் கிடைத்த புவிசார் குறியீடு...கெத்துகாட்டும் தமிழ்நாடு!

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தோடு தமிழ்நாட்டில் 60 பொருட்களுக்கு புவிசார்குறியீடு கிடைக்கப்பெற்று புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது

ஒரு பிராந்தியத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருட்களை பாதுகாக்கவும், அதன் சிறத்தன்மையை மேம்படுத்தவும், அதன் தொன்மையை வெளிக்கொணரவும் விவசாயம், உணவு, கலை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அரசு புவிசார் குறியீடுகளை வழங்கி வருகிறது.

புவிசார் குறியீடு வழங்குவதன் முக்கிய நோக்கம், சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களை போல போலிகள் உருவாவதை கட்டுப்படுத்துவதும் ஆகும்.

இந்தியாவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் கர்நாடகா மாநிலமும், மூன்றாவது இடத்தில் உத்திரபிரதேசம் மாநிலமும் இருக்கிறது.

தற்போது சேலம் ஜவ்வரிசிக்கும் அது தொன்மையை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில் தமிழ்நாட்டில் சேலம் முதலிடத்தில் இருக்கிறது.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றதால்  மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் புவிசார் குறியீடு கிடைத்த பொருட்கள் பட்டியல் இதோ:

1)ஆரணி பட்டு

2) மதுரை சுங்குடி சேலை

3) மகாபலிபுரம் கற்சிற்பம் 

4)மதுரை மல்லி 

5)அரும்பாவூர் மரவேலைப்பாடுகள்

6) மணப்பாறை முறுக்கு

7) மார்த்தாண்டம் தேன்

8) மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு 

9)மயிலாடி கல் சிற்பம் 

10) மானாமதுரை மண்பாண்டம் 

11) ஊட்டி வரிக்கி 

12)   காரைக்குடி ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள்

13) கோயம்புத்தூர் ஈரமாவு அரை பொறி

14) பவானி ஜமக்காளம் 

15) சுவாமிமலை வெண்கலப் படிமங்கள் 

16) தஞ்சாவூர் ஓவியத்தட்டு 

17) தஞ்சாவூர் ஓவியம்

18)  நாச்சியார்கோவில் விளக்கு

19) கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை 

20) கோவை கோர பருத்திப்பட்டு

21)  ஈழத்தாமொழி நெட்டை தென்னை

22) தலையாட்டி பொம்மை 

23) யூகலிப்டஸ் தைலம் 

24) திருநெல்வேலி செடிபுட்ட சேவைகள் ‌

25) தோடா பூந்தையல் 

26)விருப்பாச்சி வாழை 

27) சிறுமலை மலை வாழைப்பழம்

28)  பத்தமடை பாய்

29) தஞ்சாவூர் வீணை

30) ஈரோட்டு மஞ்சள்

31) செட்டிநாடு கொட்டான்

32) திருவில்லிபுத்தூர் பால்கோவா

33) சுவாமிமலை வெண்கல சிலை-இலட்சினை 

34) பழனி பஞ்சாமிர்தம் 

35) சீரக சம்பா அரிசி 

36) கோவில் நகை - நாகர்கோவில் லட்சுமி 

37)கொடைக்கானல் மலைப்பூண்டு

38) கோவில்பட்டி கடலை மிட்டாய்

39) வேலூர் முள்ளு கத்தரிக்காய்

40) நரசிங்கம்பேட்டை நாகசுரம்

41) இராமநாதபுரம் குண்டு மிளகாய்

42) தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு

43) கன்னியாகுமரி மாறாமலை கிராம்பு 

44) ஆத்தூர் வெற்றிலை

45) சோழவந்தான் வெற்றிலை

46) நெகமம் காட்டன் சேலை

47) கம்பம் பன்னீர் திராட்சை

48) அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

49) உடன்குடி கருப்பட்டி 

50) ஊத்துக்குளி வெண்ணை

51) கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்

52) காஞ்சிபுரம் பட்டு

53) காரைக்குடி கண்டாங்கி சேலை

54) காரைக்குடி வீடு

55) சேலத்துப்பட்டு

56) சேலம் சுங்குடி 

57) ஜடாரி நாமக்கட்டி

58) விருதுநகர் புரோட்டா 

59) வாணியம்பாடி பிரியாணி 

60) சேலம் ஜவ்வரிசி

- மோ.நாக அர்ஜுன்