அரசியல்

'தர்மத்தின் வாழ்வுதனை...' - அரசியல் பஞ்ச் வசனங்கள் ஒரு லிஸ்ட்

கொட்டாச்சி

ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து அரசியல்வாதிகளுக்கு என்று டெம்ப்ளட்டான மேடை வசனங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சிலவற்றை கீழே சிதற விடுகிறோம்.


"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. கடைசியில் தர்மமே வெல்லும்"
"இது பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது"
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"
"இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவோம்"
"என்றைக்கும் நான் மக்களுடன்தான் கூட்டணி"

"ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்"

"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்"
"எதிர்க்கட்சியினரைப் பார்த்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன்"
"எனக்கு முதலமைச்சர் பதவியின் மேல் ஆசையில்லை"
"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்"
"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்"
"இந்திய துணைக் கண்டத்திலே எல்லா சாலைகளும் ரோமை நோக்கி"
"இந்த மண்ணுக்கு ஒரு வீரம் உண்டு"

"சீனிச்சக்கரை சித்தப்பா.. ஏட்டில் எழுதி நக்கப்பா"

"ஊழலற்ற ஆட்சி அமைய வாக்களியுங்கள்"
"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது"
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"
"நெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நான்"
"உள்ளங்கை நெல்லிக்கனி போல"
"உங்கள் பொற்பாதங்களை தொட்டு.."
"பசுத்தோல் போர்த்திய புலி"
"இது இன்னொரு சுதந்திர போராட்டம்"
"என் உடல் பொருள் ஆவி அனைத்தும் இந்த தமிழ்நாட்டிற்குதான்"
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?"