அரசியல்

செய்திகள் வாசிப்பது உங்கள் பீலா சிவம்

உதயநிதிக்கு ஐநா சபை தலைவர் பதவியையும் அளிக்க வேண்டும் என திமுக இளைஞரணி கொட்டாம்பட்டி கிளை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Aravindraj R

உண்மைய மட்டும்தான் செய்தியா வாசிக்கணுமா என்ன? நாம பீலாவையும் கொஞ்சம் சேத்து செய்தி வாசிச்சா என்னனு பீலா சிவத்துக்கு ஒரு போன போட்டோம். கடகடனு கொட்டுனாப்ள. அந்த செய்திகள் நீங்களே கேட்டு பாருங்களேன்.

  • நாட்டில் பணவீக்கம் கடுமையாக குறைந்து இப்போது பணமெலிதல் அதிகரித்திருப்பதால், பால், காய்கறிப் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதளபாதாளத்தில் சென்றுள்ளன. பசுமாடுகளே வீட்டுக்கதவைத் தட்டி, பால் கறந்துக்கொடுத்துவிட்டு போவதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.

நிர்மலா சீதாராமன்
  • பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மூலப் பொருளான கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இறக்கத்தை சந்தித்திருப்பதால், ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 10 லிட்டர் கச்சா எண்ணெய் இலவசம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.

  • இந்த அட்சய திருதியையில் வியாபாரம் சரியாக இல்லை என்பதால், அரசு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விற்காமல் போன தங்கத்தை ரோட்டில் கொட்டி நகை கடைக்காரர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

உதயநிதிக்கு ஐநா சபை தலைவர் பதவியையும் அளிக்க வேண்டும் என திமுக இளைஞரணி கொட்டாம்பட்டி கிளை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • ரஜினிகாந்த்தின் கட்சி 'இமாசல்' பிரதேசத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மருதநாயகம் கமல்
  • மருதநாயகம் படத்தின் 600ஆவது நாள் கொண்டாட்ட விழாவில் எலிசபெத் ராணி பங்கேற்றார்.

  • "90ஸ் கிட்சுகள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இன்றில் இருந்து யாரும் சிங்கிள் இல்லை" என்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் அறிவித்தார்.

    - அரவிந்த்ராஜ் ரமேஷ்.