பெட்ரோல் விலை பெட்ரோல் விலை
Satire

இரண்டு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலா? - உலக நாடுகளின் பெட்ரோல் விலை லிஸ்ட்

மத்த நாட்டுல எல்லாம் இந்திய மதிப்புல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு என பார்ப்போமா?

Aravindraj R

அண்மையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அப்போது, "கடவுளின் ஆசியுடன் தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுகிறது" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்போது, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் சராசரியாக 95 ரூபாயாக உள்ளது.

சரி, மத்த நாட்டுல எல்லாம் இந்திய மதிப்புல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு என பார்ப்போமா?

லிபியா - ரூ.2.44,

ஈராக் - ரூ. 40.78,

சவுதி அரேபியா - ரூ.49.33,

ரஷ்யா - ரூ. 65.86,

வங்கதேசம் - ரூ. 75.53,

மாலதீவு - ரூ.85.70,

ஜப்பான் - ரூ.97.57,

பூட்டான் - ரூ.100.52,

இலங்கை - ரூ.121.23,

கனடா - ரூ.127.12,

ஜெர்மன் - ரூ.145.79,

இஸ்ரேல் - ரூ.189.13.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகிட்டு வருது.