ஓபிஎஸ்
ஓபிஎஸ்  ஓபிஎஸ்
Satire

போன ஜென்மத்தில் ஓபிஎஸ் யாராக இருந்திருப்பார்? - ஓர் அலசல்

Aravindraj R

போன ஜென்மத்துல முன்னாள் முதலமைச்சர் (அதிமுகல எந்த போஸ்ட்ல இருக்கார்னு தெர்ல. மொத இருக்காரானே தெர்ல. எதுக்கு வம்பு. மு.மு-னே போடுவோம்) ஓ.பன்னீர் செல்வம் யாரா இருந்துருப்பார்னு இராயப்பேட்டை சிக்னல்ல உக்காந்து யோசிச்சோம். அதன் விளைவ பாருங்க:

போன ஜென்மத்தில் தவளையாக வாழ்ந்தவர் முனிவர் தொட்டதால், திடீரென ராஜகுமாரனாக மாறி நாட்டை ஆட்சி செய்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி இவரேதான்.

1771ஆம் ஆண்டில், தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகே உள்ள சோழபுரம் என்ற நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

தாய்மாமன் சங்கிலி மாயன் சொன்னதைச் செய்துகொண்டு அமைதியாய் குனிந்து பொம்மைகளோடு ஆட்சி செய்து கூன் பாண்டியன் என பெயர் எடுத்தவர்.

தன்மீது படையெடுத்து வரும் வருமான வரி வல்லவராயனிடம் வெள்ளைக் கொடி காட்டி தப்பித்தார்.

'ஒரு சிறிய புறாவுக்கு போரா? இவர்களோடு அக்கப்போறாக அல்லவா உள்ளது' என புலம்பியபடி, போர்கள், யுத்தங்களுக்கு பயந்தவராக இருந்தார். ஆனாலும், தர்ம யுத்தங்களை விரும்புபவராக இருந்தார்.

வேட்டையாட காட்டிற்கு சென்று கரடியிடம் பல்பு வாங்குவதை பகுதி நேர பொழுதுபோக்காகக் கொண்டாலும், கடற்கரைக்கு சென்று தியானம் செய்வதை முழு நேர பொழுதுபோக்காகக் கொண்டவர்.

தனக்கு எதிராக 'ஒன்றை தலைமை' எனும் புரட்சிப்படை உருவாகிறது என்பதை (முன்னாள்)அமைச்சர் மூலம் தெரிந்துக்கொள்கிறார். உக்கிரபுத்திரன் எனும் தன் சேலத்து சகோதரன்தான் அப்படைக்கு தலைமை என்பதை உணர்ந்து அதிர்ந்தார்.