Senthil Balaji டைம்பாஸ்
அரசியல்

Senthil Balaji : பழைய திமுகவ பாக்கணுமா? - போஸ்டர் புகழ் சுப்பு பேட்டி !

நேத்து நைட்டுதான் இந்த ஐடியா எனக்கு தோணுச்சு உடனே போஸ்டர் கடைக்கு கால் பண்ணி விவரத்தை சொன்னேன். தெருவெல்லாம் அதை ஒட்டுறதுக்கு ஆளும் பசையும் கூட அவங்களே ஏற்பாடு பண்ணிடுவாங்க.

Zulfihar Ali

ராமநாதபுரத்தில் கொஞ்சநாளாவே வினோதமான அரசியல் போஸ்டர்கள் ஒட்டப்படுது. இன்னைக்கு கூட "பழைய திமுகவ பாக்கணுமா?"னு ஒரு போஸ்டர் வைரலாக போஸ்டர் ஒட்டிய சுபலெட்சுமி பஜாஜ் உரிமையாளர் அரு.சுப்பிரமணியத்திடம் பேசினேன்.

"நான் ராமநாதபுரம் திமுகல சாதாரண அடிப்படை உறுப்பினருங்க. போஸ்டர் அடிக்கிறத நான் ஒரு பொழுதுபோக்கா வெச்சிருக்கேன். அதனால அப்பப்ப இந்தமாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்.

நான் இதுக்கு முன்னால மதிமுக கட்சில இருந்தேன். அங்கிருந்து தாவி அமமுகல கொஞ்சநாள் இருந்தேன். நானா போனேன்னு சொல்ல முடியாது இழுத்துட்டு போய்ட்டாங்கனு சொல்லலாம். இப்போ கடைசியா திமுகல வந்து சேர்ந்துட்டேன். இப்போ நான் ஒரு dravidian stock.

இந்த ஒன்றிய அரசு தொடர்ந்து திமுகவை அச்சுச்சுறுத்தி பயமுறுத்த பாக்குறாங்க. அந்த கோவத்துல நேத்து நைட்டோட நைட்டா அடிச்ச போஸ்டர்தான் இந்த "பழைய திமுகவ பாக்கணுமா?" இன்னைக்கு பார்த்தா ஒரே நாள்ல ஊரெல்லாம் வைரலாகிடுச்சு. 

நேத்து நைட்டுதான் இந்த ஐடியா எனக்கு தோணுச்சு. உடனே போஸ்டர் கடைக்கு கால் பண்ணி விவரத்தை சொன்னேன். என்னோட டேஸ்ட் அவங்களுக்கு நல்லா தெரியும். எதிர்பார்த்த மாதிரியே அடிச்சு கொடுத்திட்டாங்க. தெருவெல்லாம் அதை ஒட்டுறதுக்கு ஆளும் பசையும் கூட அவங்களே ஏற்பாடு பண்ணிடுவாங்க.  அந்தளவு நான் அவங்களுக்கு ரெகுலர் கஸ்டமர்.

இதுக்கு முன்னால ஏகப்பட்ட போஸ்டர் இப்படி பரபரப்பா பேசப்பட்டிருக்கு... அதுல இதுவும் ஒண்ணு! என்ன சில நேரம், 'இந்த சுப்புக்கு வேற வேலையே இல்ல'னு போலீஸ்காரங்க போஸ்டரைப் பார்த்துட்டு செல்லமா திட்டுவாங்க. அதையெல்லாம் பார்த்தா போஸ்டர் அடிக்க முடியுமா?'' என்கிறார் போஸ்டர் புகழ் சுப்பு என்கிற சுப்பிரமணியன்.