பிரதமர் மோடி
பிரதமர் மோடி டைம்பாஸ்
அரசியல்

'சொல்லுங்க மோடி.. சொல்லுங்க..' - ராகுல் கேட்கும் பத்து கேள்விகள் இதுதான்!

டைம்பாஸ் அட்மின்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஃபேஸ்புக் பதிவு மூலம் பிரதமர் மோடியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் என 10 கேள்விகளை கேட்டுள்ளார். அவை,

1. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏன், ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் தருவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது?

2. தயிர் மற்றும் தானியங்கள் போன்ற அன்றாட உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதித்து மக்களின் உணவை ஏன் பறிக்கிறீர்கள்?

3. சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்?

4. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80-ஐ தாண்டியது ஏன்?

5. 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு ஆள்சேர்ப்பு கூட நடைபெறவில்லை. 4 வருட ஒப்பந்தத்தில் இளைஞர்கள் ஏன் அக்னிவீரர் ஆக நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்?

6. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் எங்கள் எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. நீங்கள் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்?

7. பயிர்க் காப்பீட்டின் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.40,000 கோடி பலன் அடைந்திருக்கிறது. ஆனால், 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியில் அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்?

8. விவசாயிகளுக்கு சரியான `குறைந்தபட்ச ஆதரவு விலை' என்ற வாக்குறுதி என்ன ஆனது? விவசாயிகள் இயக்கத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு என்ன ஆனது?

9. மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவிகித தள்ளுபடி ஏன் நிறுத்தப்பட்டது? பதவி உயர்வுக்கு பணம் செலவழிக்கும்போது முதியவர்களுக்கு தள்ளுபடி வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லையா?

10. 2014-ல் 56 லட்சம் கோடியாக இருந்த மத்திய அரசின் கடன், தற்போது 139 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, மார்ச் 2023-க்குள் இது 156 லட்சம் கோடியாக இருக்கும். நாட்டை ஏன் இப்படி கடனில் மூழ்கடிக்கிறீர்கள்? என மோடிக்கு, ராகுல் கேள்விகளை எழுப்பினார்.

மேலும் இந்த பதிவில், ``கேள்விகளின் பட்டியல் மிக நீளமானது ஆனால் முதலில் இந்த 10 கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்" என்றும் ராகுல் கூறியிருந்தார்.