RN Ravi timepass
அரசியல்

RN Ravi : இது ஆளுநரின் பாஜக அமைச்சரவை - யாருக்கு எந்த இலாகா?

ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழ்நாடு பா.ஜ.க.காரர்களை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் கொண்டிருந்தால் யாருக்கு எந்த இலாகா? 'ஹைகோர்ட்டாவது....' புகழ் ஹெச்.ராஜா - சட்டத்துறை அமைச்சர்

கொட்டாச்சி

அமைச்சரவை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். ஒருவேளை ஆளுநர் ஆர்.என்.ரவியே தமிழ்நாடு பா.ஜ.க.காரர்களை அமைச்சர்களாக நியமிக்கும் அதிகாரம் கொண்டிருந்தால் யாருக்கு எந்த இலாகா?

சொந்தக் கட்சிக்காரர்களையே வீடியோ எடுத்து அசிங்கப்படுத்த ஆள் வைத்திருக்கும் அண்ணாமலை - செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்.

கட்சி மாறுவதில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் விளையாட்டு வீரர்களையே மிஞ்சும் குஷ்பு - விளையாட்டுத்துறை அமைச்சர்.

கம்ப ராமாயணம் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று சொல்லும் தமிழிசை சௌந்தர்ராஜன் - மருத்துவத்துறை அமைச்சர்.

'ஹைகோர்ட்டாவது....' புகழ் ஹெச்.ராஜா - சட்டத்துறை அமைச்சர்.

ஆருத்ரா நிதிநிறுவன மோசடியில் சிக்கிய, குற்றம் சாட்டப்படும் ஆருத்ரா சதீஷ், ஆர்.கே.சுரேஷ், அமர் பிரசாத் ரெட்டி - நிதித்துறை.

காலில் செருப்பு அணியாத பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி - கால்நடைத்துறை அமைச்சர்.

'மச்சான்' நமீதா  - தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்.

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட கே.டி.ராகவன் - கைத்தறி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர்.

வாட்ச் பில்லுக்கு எக்குத்தப்பு கணக்கு சொன்ன வானதி சீனிவாசன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

உலக மக்கள் தொகைக்குக் கணக்கு சொல்லி திகைக்க வைத்த மதுவந்தி - உயர்கல்வித்துறை அமைச்சர்.

எல்லோராலும் சகட்டுமேனிக்கு அந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்படும் கேசவ விநாயகம் - பெண்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர்.