Telangana
Telangana  timepass
அரசியல்

Telangana : வீட்டுக் காவலில் வைத்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆரத்தி எடுத்த YS Sharmila !

டைம்பாஸ் அட்மின்

தெலுங்கானா மாநிலத்தில் தலித் பந்து திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, கஜ்வெல் தொகுதியில் உள்ள தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா அங்கு சென்று அம்மக்களைப் பார்க்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவரது பயணத் திட்டத்திற்கு தெலுங்கானா காவல்துறை அனுமதி வழங்கவில்லை. காவல்துறையின் முடிவையும் மீறி கஜ்வெல் தொகுதிக்கு செல்வதற்காக அவர் இன்று (ஆகஸ்ட் 18) காலையில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய ஐதராபாத் போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, அவரை வீட்டுக் காவலிலும் வைத்தனர். அப்போது தன்னை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு ஒய்.எஸ்.ஷர்மிளா ஆரத்தி எடுத்தார். மேலும், "கடவுளே.. இவர்களுக்கு ஞானத்தையும் நீதியையும் கொடுங்கள். அதனால் அவர்கள் அரசாங்கத்தின் அமைப்பாக வேலை செய்ய வேண்டியதில்லை" என பிரார்த்தனை செய்துள்ளார்.

பின்னர், வீட்டுக் காவலை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அவரது தொகுதிக்குள் செல்லவிடாமல் தன்னை குறிவைப்பது வெட்கக்கேடான செயல் என ஷர்மிளா குற்றம் சாட்டினார்.