Rewind

80'ஸ் தமிழ் படங்களில் இத கவனிச்சுருக்கீங்களா? - பாகம் 1

எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? டிவியில் பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் இன்னும் ரசனையுடன் பார்ப்பவரா? அப்போ இங்கே இருக்கிற விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.

டைம்பாஸ் அட்மின்

நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவரா? அதுவும் எண்பதுகளில் இருந்து தொடர்ச்சியாக சினிமா பார்ப்பவரா? டிவியில் பிளாக் அண்ட் ஒயிட் படங்களையும் இன்னும் ரசனையுடன் பார்ப்பவரா? "அட ஆமாப்பா.. ஆமா.." என்கிறீர்களா? அப்போ இங்கே இருக்கிற எல்லா விஷயங்களும் உங்க மைண்டுக்கு கண்டிப்பா வந்துருக்கும்.

பாம் டிஸ்கனெக்ட் பண்றப்ப சிவப்பு வயர கட் பண்ண போய், அத கட் பண்ணாம பச்சை வயர கட் பண்ற மாதிரி போய் அதையும் கட் பண்ணாம திரும்பவும் சிவப்பு வயர் கிட்ட வந்து அத கட் பண்ணுவாரு ஹீரோ.

ஒரு படத்தில் ஏதாச்சும் தப்பா கட் பண்ணி, மொத்தமா ஹீரோவுக்கு எண்ட் கார்ட் போடுவாங்கன்னு பார்த்தா ஒரு ஹீரோவும் தப்பா கட் பண்ணி நான் பார்த்ததே இல்ல. இதுக்கு பேருதான் வயர்சின்ட்ரோம் போல.

'குக்கூ என்று குயில் கூவாதோ பாட்டா' இருக்கட்டும், 'என்னடி மீனாட்சி' பாட்டா இருக்கட்டும், 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா' பாட்டா இருக்கட்டும், சின்னசின்ன வித்தியாசங்கள் மட்டுமே காட்டி கையை இரண்டு பக்கமும் விரித்து தலையை வலதும் இடதும் ஆட்டி கமல் ஆடுவதாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா? இல்லாங்காட்டி புலியூர் சரோஜாவின் ஒரே ஸ்டப்பை பல படங்களில் கமல் மாடிஃபிகேஷன் பண்ணிட்டு இருந்தாரா?

வேகாத வெயிலில் ஜாக்கெட் போட்டுக்கொண்டு, மழைநாளில் டிராபிக் கான்ஸ்டபிள் அணியும் உடைகளை மாற்றிக்கொண்டு, ஹீரோவாக ரோட்டுக் கடையில் தலையை சிலுப்பிக்கொண்டு டீ சொல்லும் நல்லவனுக்கு நல்லவன் ரஜினி அப்போதும் இப்போதும் எப்போதும் எனக்கு ஆச்சர்யமே!

சத்யன் போன்ற ஹிட் படங்களில் கூட வெவ்வேறு வில்லன்களோடு விஜயகாந்த் மோதும் போது எல்லா காட்சிகளிலும் தவறாமல் ஆஜராகி, விஜய்காந்திடம் அடி வாங்கி செல்லும் பொன்னம்பலம் உண்மையிலேயே எந்த வில்லனோட அடியாள்?

- ஆர்.சரண்.