புழுதிபட்டி டைம்பாஸ்
Rewind

ஊர் பெயர்களில் உள்ள டெரர் பெயர்கள் - ஒரு லிஸ்ட்

சிவகங்கை அருகே இருக்கும் 'சிரமம்' ஊர்க்காரர்கள் எவ்வளவு வசதியாக ஆடம்பரமாக வசித்தாலும், "எந்த ஊரில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "சிரமத்தில் இருக்கிறேன்" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

டைம்பாஸ் அட்மின்

ஊர் பெயர்களைச் சொன்னால், 'அட அழகான பெயரா இருக்கே'னு கேட்டவர் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. நம்மை குறுகுறுவென்று ஒரு வித மாதிரியாக பார்க்காமல் இருந்தால் போதும் என்று நினைக்கும் அளவுக்கு தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் அமைந்துவிட்டன. அப்படி சில ஊர்களுக்கு ஒரு ரவுண்ட் போவோம்.

சுடுகாட்டான்பட்டி:

ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் இந்த ஊரில் இப்போது ஹோட்டல், ரிசார்ட் என்று டூரிஸ்ட் ஸ்பாட்டாக விளங்கினாலும் பெயரை மாற்ற முடியவில்லை. ஊர்க்காரர்கள் விவரமாக எஸ்.கே.பட்டி என ஷார்ட் ஃபார்மில் அழைக்கிறார்கள்.

சுடுகாட்டான்பட்டி

நாய்க்குலைச்சான்பட்டி:

சுற்றுலாத்தலமான பாம்பனில் இருக்கும் ஒரு ஏரியாவில் பெயர்.

ஆவியூர்:

இரவு நேரத்தில் இந்த ஊருக்கு போக முடியுமா என்று யோசிக்காதீர்கள். மதுரையை ஒட்டிய ஊராட்சி இந்த ஊர்.

பேய்குளம்:

பரமக்குடி பக்கம் ஒரு கிராமத்தின் பெயர்.

புழுதிபட்டி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இருக்கும் இந்த ஊருக்கு போனால் டஸ்ட் அலர்ஜி வருமோ என்று யோசிக்காதீங்க.

பாம்பூர்: முதுகுளத்தூர் பக்கம் உள்ள இந்த ஊர் பெயரை சொல்லும் போதே அனகோண்டா படக்காட்சிகளும் மனதில் ஓட ஆரம்பிச்சுடுது.
புழுதிபட்டி

சிரமம்:

சிவகங்கை அருகே இருக்கும் இந்த ஊர்க்காரர்கள் எவ்வளவு வசதியாக ஆடம்பரமாக வசித்தாலும், "எந்த ஊரில் இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், "சிரமத்தில் இருக்கிறேன்" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

கோமாளி பட்டி:

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊரில் சர்கஸ் காரர்களோ, நாடகக்காரர்களோ இல்லை. அரிய கனிம மணல் கிரானைட் தொழிற்சாலைதான் உள்ளது.

- செ.சல்மான்.