Rewind

உங்க முடியில இனிப்பு இருக்கா? - உலகை கலக்கும் திருப்பதி முடி

மனிதனின் முடியில் அமினோ ஆசிட் இருக்கிறது. சுவையோடு கூடிய இந்த அமிலத்தை பீட்சா மற்றும் பால் உணவுகளில் சேர்க்கின்றனர்.

டைம்பாஸ் அட்மின்

சாப்பிடும் உணவில் ஒரு முடி கிடந்தால் அதை அசூயையோடு எடுத்து வெளியே போடுவோம். இன்னும் சிலரும் மூடிக் கிடந்தால் அந்த சாப்பாட்டை எடுத்து தூரமாக வைத்து விடுவார்கள். ஆனால், உலகம் முழுவதும் ஃபார்ஸ் புட் உணவுப் பொருட்களில் முடியில் இருந்து எடுக்கப்படும் ஒரு அமினோ அமிலம் சேர்க்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

முடி திருத்தும் கடை

மனிதனின் முடியில் அமினோ ஆசிட் இருக்கிறது. சுவையோடு கூடிய இந்த அமிலத்தை பீட்சா மற்றும் பால் உணவுகளில் சேர்க்கின்றனர். செயற்கை இனிப்பாக சாக்லேட் ஐஸ்கிரீம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

சில நாடுகளில் வாத்து முடியில் இருந்து எடுக்கப்பட்ட அமினோ அமிலத்தை பயன்படுத்துகின்றனர்.

திருப்பதியில் இருந்து வெளிநாடு செல்லும் முடி அங்கு முறையாக கழுவப்பட்டு, அதன் பிறகு அதிலிருந்து தேவையான அமிலம் எடுக்கப்படுகிறது.

ஃபேஷன் டிசைனர்கள் முடியை கொண்டு உருவாக்கும் துணிகளுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட். நம்பர் ஒன் பாப் சிங்கர் லேடி காக்காவுக்கு பிடித்தமான உடைகளில் முடியால் செய்யப்பட்ட உடையும் ஒன்று.

கப்பலிலிருந்து கடலில் கசியும் எண்ணெயை உறிஞ்சி எடுப்பதற்கு மனித முடிகளால் உருவான ஒருவகை ஸ்பாஞ்ச் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை, 3,70,000 சலூல் கடைகளில் இருந்து பெறப்பட்ட முடியை கொண்டு 25 மைல் நீளத்துக்கு ஸ்பாஞ் செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் முடியையும் கொடுக்க விரும்பினால் ஹேர் பார் ஆயில் ஸ்பில்ஸ் ப்ரோகிராம் என்ற பேஸ்புக் முகவரியை தொடர்புக்கொள்ளலாம்.

உங்கள் முடியின் விலை எவ்வளவு என்று சொல்வதற்கு பல இணையதளங்கள் இருக்கின்றன.