மின்மினிப் பூச்சி
தமிழ்ல வந்த முக்கியமான ட்ரெண்ட் செட்டர் படங்கள்ல சுப்ரமணியபுரமும் ஒன்னும்.
'கண்கள் இரண்டா'னு ஒரு பாட்டப் போட்டு எல்லாரையும் கட்டி இழுத்த ஜேம்ஸ் வசந்தன் சசிகுமாரோட ஸ்கூல் ம்யூசிக் டீச்சர்.
வெறும் 63 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்திரைப்படம், பெரும் வசூலை அள்ளியது.
இந்த படம்தான் புகழ் பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு 'கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது.
அழகர் கேரக்டருக்கு ஜெய்-க்கு முன்ன சாந்தனு போன்றவர்கள நடிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனால், ஜெய்தான் ஜெயிச்சு கொடுத்துருக்கார்.
துளசியா நடிச்ச ஸ்வாதிக்கு க்ளைமாக்ஸ் தெரியாதாம். இரண்டு பேரும் சேந்துருவாங்கனே நினைச்சுட்டு இருந்தாங்கலாம்.
சுப்ரமணியபுரம் மதுரையோட மையத்துல இருக்க பகுதி. ஆனால், 80'ஸ்க்காக திண்டுக்கல்ல ஷூட் பண்ணாங்க.
மொத்த படமும் 85 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது.
80களின் மதுரையைக் காட்ட, Art Department கடுமையாக உழைத்திருக்கிறது. எந்த இடத்திலும் சமகால பொருட்கள் இருக்காது.
'மதுர குலுங்க குலுங்க' பாடல் மூலம் 'வேல் முருகன்' என்ற பாடகர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தார்.