Maaveeran : Vandalur Zoo சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் Sivakarthikeyan !

நடிகர் சிவகார்த்திகேயன் 2018-2020-ம் ஆண்டு 'அனு'என்ற வெள்ளைப்புலியையும், 2021-ம் ஆண்டு 'விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், 'பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்தார்.
Sivakarthikeyan
Sivakarthikeyantimepass
Published on

சென்னை அருகில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருகிறார்கள்.

பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு பந்தத்தை உருவாக்கும் விதமாக விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவை அன்பளிப்பாக அளிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 ஜி-க்கான ரசீது மற்றும் பூங்காவை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 3 வயதுடைய 'ஷேரு' என்ற ஆண் சிங்கத்தை 6 மாத காலத்துக்கு தத்தெடுத்து அதற்குண்டான தொகையை காசோலையாக வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் வழங்கினார்.

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் 2018-2020-ம் ஆண்டு 'அனு'என்ற வெள்ளைப்புலியையும், 2021-ம் ஆண்டு 'விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், 'பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan
South Korea : தென் கொரியா மக்களின் வயது பின்னோக்கி போகிறதா? - என்னவா இருக்கும்‌ ?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com