Varisu on OTT : Amazon Prime இல் வெளியானது விஜய் இன் வாரிசு !

திரையரங்குகளில் வெளியாகி 40 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
Varisu
Varisutimepass
Published on

ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம்.

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில், தமன் இசையில், ஒரு குடும்பத்தின் கதைக்கருவைக் கொண்டு வெளியானது வாரிசு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது.

வசூல் ரீதியாக சாதனைப் படைத்த வாரிசு, அதிகாரப்பூர்வமாக உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படக்குழுவினர் அறிவித்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி 40 நாட்கள் கழிந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வாரிசு திரைப்படம் இன்று (பிப். 22) வெளியாகியுள்ளது. 

Varisu
Varisu: Vijay படங்களில் இலுமினாட்டி சிம்பல் அதிகம் - பாரி சாலமன்
Timepass Online
timepassonline.vikatan.com