Hugo Boss என்ற நிறுவனம் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு 1924ம் ஆண்டு நவயுக, புதிய உயர்தர ஆடைகளை தயாரிக்கும் ஃபேஷன் ஹவுஸாகவும், பிராண்டாகவும் தங்கள் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஆடைகள், அணிகலன்கள், காலணிகள் மற்றும் வாசனை பொருட்களை விற்பனை செய்கிறது.
இப்படி உயர்தர பொருட்களை உற்பத்தி செய்யும் Hugo Boss நிறுவன தயாரிப்பான T.Shirtகள் ரூ.6,026 முதல் ரூ.25,000வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவன சட்டைகள் ரூ.7,200 முதல் 1,30,000 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனமானது இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தலைமை தாங்கிய நாசிக் கட்சியின் படைகளுக்கான சீருடையை தைத்துக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர்களின் தயாரிப்பானது 100% முற்றிலும் காட்டன் என்பதாலும், அவர்கள் பயன்படுத்தும் ஆடைகளின் தரம் முதல் தர பருத்தியில் இருந்து செய்யப்படுவதாலும் இதன் விலையானது எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
பெரும்பாலான நடிகர், நடிகைகளின் தேர்ந்த விருப்பமான பொருட்கள் Hugo Boss நிறுவன தயாரிப்புகளாகவே இருக்கின்றன.
இவர்களின் தயாரிப்பான Hugo Boss Perfume பெரும்பாலான நடிகர், நடிகைகளின் விருப்பமான வாசனை திரவியமாக உள்ளது. இந்தியாவின் முன்னனி பாலிவுட் நடிகையாக தீபிகா படுகோனே தனக்கு மிகவும் பிடித்த நறுமனங்களை தரும் வாசனை திரவியங்களில் ஒன்று இந்த Hugo Boss Perfume என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிராண்டன் இந்த ஆண்டிற்கான (2023) இந்திய அம்பாஸிடராக சோனம் கபூரின் தம்பியும், அனில் கபூரின் மகனுமான பாலிவுட் நடிகர் ஹர்ஷவர்தன் கபூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடிகர் விஜய் மகன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று திரையாக்கம் சார்ந்த படிப்புகளை படித்து முடித்து விட்டு தற்போது இயக்குநராக களம் இறங்கி இருக்கிறார்.அ
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். அதன்படி நடிகர் விஜய் சேதுபதியை ஹீரோ வைத்து படம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான சந்திப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சை அணிந்திருந்த சட்டை தற்போது பேசு பொருளாகி உள்ளது. அந்த சட்டையின் விலை ரூ.15,500 என்பது தான் இதற்கு காரணம். அத்தோடு அது Hugo Boss நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
- அ.சரண், மோ. நாக அர்ஜுன்.