விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரிகளை சொன்னார் விஜய். அதில் ஒன்றாக முயல் மற்றும் யானையை வைத்து ஒரு வேட்டை கதையை கூறினார்.
“ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல வேட்டையாடினார். ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கும் திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி. அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர்" என்று கூறி கதையை முடித்தார்.
இந்த யானை, முயல் கதை சமூக வலைதளங்களில் தீயாக பரவி, பாராட்டுகளையும் கலாய்களையும் ஒருசேர வாங்கி வருகிறது. உண்மையில் இந்த முயல், யானை கதை ஒரு திருக்குறளில் இடம்பெற்றுள்ளது.
படைச்செருக்கு என்று அதிகாரத்தில் வருகிறது இந்தக் குறள்.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"
அதற்கான பொருள், வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது வலுவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது என்று கூறுகிறது.