
AL சூர்யா சோஷியல் மீடியாவில் சமீபத்திய வைரல் மனிதர்.
"த்ரிசா என் மனைவிங்க, அடுத்த பிரதமர் நான்தாங்க"னு மனுஷன் இஷ்டத்துக்கு உருட்ட ஆளை நேரில் சந்தித்து பேசினேன்.
"என்னைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்க கூடாது இருந்தாலும் சொல்றேன். இன்னைக்கு தமிழ்நாட்டுல AL சூர்யாவை தெரியாதவங்க யாருமே இல்ல அந்தளவு பேமஸாகியிருக்கேன். அடிப்படைல நான் ஒரு இசையமைப்பாளர். சில படங்களுக்கும் இசையமைச்சிருக்கேன். இதுபோக 7 புத்தகங்கள் எழுதியிருக்கேன்.
தன்னம்பிக்கை பேச்சாளரா இருக்கேன். இப்படி ஏகப்பட்ட திறமைகளை வெச்சிருக்கிறவன்தான் இந்த AL சூர்யா. கோடிக்கணக்கான மக்கள் தினமும் என்னை கூகுள்ல சர்ச் பண்ணி தேடுறாங்க என் பேட்டிகளை பாக்குறாங்க. இப்படி பிரபலமா இருக்கிறதால நிறைய பேர் பாராட்டுவாங்க சிலர் திட்டவும் செய்வாங்க அதைப் பத்திலாம் நான் கவலைப்படுறதுதே கிடையாது.
ஏன்னா அதுக்கு எனக்கு டைமும் கிடையாது. எனக்கு அரசியல்ல ஆர்வம் இருக்கு. இந்த மினிஸ்டர், சிஎம் இப்படி சின்னச் சின்ன பதவியெல்லாம் வேணாம். ஸ்ட்ரெயிட்டா பிரதமர் ஆகணும். அதான் நம்ம லட்சியம். அதுக்கான வேலைகள்தான் இப்போ வேகமா நடந்துட்டு இருக்கு"
த்ரிஷா உங்க மனைவின்னு சொல்றீங்க த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் எப்போ கல்யாணம் நடந்துச்சு ?
என் மனைவி திரிஷா பத்தி நான் இனி பேசப்போறது கிடையாது. ஏன்னா ஏற்கனவே பேசுனதுக்கே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் போய்க்கிட்டு இருக்கு. என் மாமியார் அதாவது த்ரிஷா அம்மா நான் பேசுறதையெல்லாம் பெருசா கண்டுக்க வேணாம்னு மீடியாகாரங்ககிட்ட சொல்லிருக்காங்க. அதனால நான் சொல்ற எதுவும் மீடியால சீரியஸாவே போட மாட்டேங்குறாங்க.
ஆனா டைம்பாஸ் உங்கமேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என் வார்த்தையிலே உண்மை இருக்குன்னு தெரிஞ்சு நீங்க இவ்ளோ தூரம் என்னை தேடி வந்திருக்கீங்க. எனக்குள்ள மூடி வெச்சிருக்குற இந்த உண்மையெல்லாம் உலகத்துக்கு ஒருநாள் தெரியவரும். அதுவரைக்கும் நான் இப்படியே அமைதியா இருந்துட்டு போறேன். ஏன்னா நான் ஞானமடைந்தவன்.
சரி பிரதமராக போறேன்னு சொன்னேன்ல அது எப்படின்னு சொல்றேன். என்கிட்ட ஒரு ஸ்பெஷல் 200 ரூபா நோட்டு இருக்கு அதோட சீரியல் நம்பர் 999999. இப்படி 9 ஆம் நம்பர் வரிசையா இருந்தா நவகோள்களின் சக்தி அந்த நோட்டுல இருக்குன்னு அர்த்தம். பணம், பேர், புகழ்னு எல்லாத்தையும் இழுத்து கொண்டுவர்ற சக்தி இதுக்கு இருக்கு.
இந்தியாலயே இந்த நோட்டு என்கிட்ட மட்டும்தான் இருக்கு. இதைத் தேடி நான் போகல அதுவே என்கிட்ட வந்துச்சு. ஒருநாள் நைட் தூங்கும்போது திடீர்னு ஒரு மனசு உலுப்புச்சு படார்னு எந்திரிச்சு பர்ஸை தொறந்து பார்த்தா உள்ள இந்த நோட்டு உள்ளே இருந்துச்சு. ராஜயோகம் உள்ளவங்ககிட்டதான் இந்த நோட்டு தேடி வருமாம். அந்த யோகம் உள்ளவங்க பிரதமரா கூட வருவாங்கலாம் இப்போ புரியுதா?
அவ்ளோ ஏன் நான் என்னைக்கு இறப்பேன்னு கூட எனக்கு தெரியும். அந்தளவு காலத்தையும் நேரத்தையும் கணிச்சு வெச்சிருக்கேன். பார்க்கதான் நான் சாதாரண மனுஷன் மாதிரி இருப்பேன். ஆனா நான் ஒரு சூப்பர் ஹியூமன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். சரி நிறைய அரசியல் வேலைகள் இருக்கு அதை கவனிக்கணும். நான் பிரதமரானதும் உங்களுக்கு அடுத்த பேட்டி கொடுக்கிறேன்" என்று சீரியஸாகவே பேசுகிறார் AL சூர்யா.