'அலிபாபா குகை பாஸ்வேர்டு, சிட்டிசன் தல' - தமிழ் சினிமாவின் உலக சாதனைகள்

அரை நூற்றாண்டுக்கு முன்னாடியே ‘அலிபாபா’ குகைக்குள்ள ‘வாய்ஸ் பாஸ்வேர்டு’ அப்ளை பண்ணி, உலகத்துக்கு ஐடியா கொடுத்தது ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம்.
அலிபாபா குகை
அலிபாபா குகைடைம்பாஸ்

‘கேஜிஎஃப் - 2’யின் வெற்றி ரகசியம் என்ற தலைப்பில், ஏகப்பட்ட பில்டப் செய்திகள் வந்து விழுகின்றன. அவர்களுக்குப் போட்டியாகப் புகழ் பாட நம் தமிழ் சினிமாவுல எதுவுமே நடந்துடலையா என்ன?

ஒவ்வொரு வெப்சைட்டுக்கும் பாஸ்வேர்டு போட்டுப் படாதபாடு படுறீங்களேனு ‘வாய்ஸ் பாஸ்வேர்டு’ கண்டுபிடிச்சாங்க. ஆனா, அதை அரை நூற்றாண்டுக்கு முன்னாடியே ‘அலிபாபா’ குகைக்குள்ள அப்ளை பண்ணி, ‘இப்படி ஒரு டெக்னாலஜியைக் கண்டுபிடிக்கலாமே’னு உலகத்துக்கு ஐடியா கொடுத்தது நம்ம ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் என்றால் மிகையாகுமோ?

ரெண்டே நிமிடத்தில் நூடுல்ஸ் செய்யலாம். விரட்டி வர்ற வில்லன்கள் கண்ணுல விரலை விட்டு ஆட்ட முடியுமா? 100 குதிரை வண்டியில் விரட்டிவந்த வில்லன்கள் கண்ணுல, லோடு லோடா மண்ணைத் தூவிவிட்டு, வைக்கோல் ருக்குள்ள மறைஞ்சு கதாநாயகியைக் காப்பாற்றியதோடு, அந்த வைக்கோலை வைத்தே பல வில்லன்களை வீழ்த்தி, லிஃப்ட்டே இல்லாமல் லெஃப்ட், ரைட் போட்டு மலைகளைக் கடந்த நம்ம ‘முத்து’ ரஜினிக்கு முன்னாடி, காதலியைக் காப்பாற்ற வானத்துல டைவ் அடிக்கும் ஸ்பைடர் மேனாலும் முடியாது, பேட் மேனாலும் முடியாது!

அலிபாபா குகை
'ரஜினி இல்ல கண்ணா.. கஜினி..' - டைம்பாஸ் எடிட்ஸ்

உலகத்தை அழிக்க ஏலியன்களைக் கூட்டிக்கிட்டு வர்றது, பேய், பிசாசு, ஜோம்பிகளைக் கட்டவிழ்த்து விடுறதெல்லாம் ‘போங்கப்பு’ போங்கு. தொண்டைக் கரகரப்புக்கு மிட்டாய் போட்டுக்கிற மாதிரி, ‘கிருமி பாம்’ குப்பியைக் கடிச்சு முழுங்கினா மேட்டர் ஓவர்னு உலக சினிமாவுக்கே ஓவர் கான்ஃபிடென்ட் கொடுத்து, ‘தசாவதாரம்’ காட்டியவர்தானே கமல்!

ஒரு சட்டத்தை அமல்படுத்த மொத்தப் பாராளுமன்றமும், சட்டமன்றமும் சட்டையைப் பிச்சுக்கிட்டு சண்டை போட்டுக்கிறதெல்லாம் எல்லா நாட்டுலேயும் நடக்குமாம்.

ஆனா, நாலு பக்க வசனத்தை ரெண்டு நாள் லீவுல மனப்பாடம் பண்ணி நீதிபதியிடம் ஒப்பிச்சதோட, குற்றவாளிகளுக்குக் கொடூரமான தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு சிரிச்சுக்கிட்டே நடந்து வந்தவர் நம்ம ‘சிட்டிசன்’ தல!

அலிபாபா குகை
இம்மானுவேல் சேகரனாரை மையப்படுத்தி படம் எடுக்கிறாரா கமல்?

பைக் ஓட்டிக்கொண்டு கிளம்பியிருப்பார் நம்ம ஹீரோ. அந்த சமயம் வில்லன் ஆட்கள் அம்மாவை அடிக்க, ஸ்லோமோஷனில் தரையில் விழ ஆரம்பிப்பார் அம்மா.

உடனே தன் பைக்கைத் திருப்பி, வில்லனைத் துவைத்துப்போட்டு, ஓட்டிவந்த வண்டியையும் ஸ்டாண்ட் போட்டு பத்திரமாக நிறுத்தி, கீழே விழ இருந்த தன் அம்மாவை உள்ளங்கையில் தாங்கும் ‘அய்யோ... அம்மா...’ ஹீரோவை வேறெந்த சினிமாவிலாவது பார்க்க முடிந்திருக்கிறதா? நம்ம தமிழ் சினிமாவில் பார்க்கலாம்!

அலிபாபா குகை
'டாக்டர். லெஜண்ட், லொள்ளு சபா ஜீவா, அஜித் ரசிகர்கள்' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com