புதிய தோற்றத்தில் Amy Jackson - யார் இந்த Cillian murphy ?

இந்தக் கதாபாத்திரம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர, சமகால இளைஞர்களுக்கு வைப் மெட்டீரியலாகவும் மாறி போனார். பலரின் வாட்சப் ப்ரோஃபைல் இமேஜாக கெத்தாக வாயில் சிகிரெட்டுடன் அமர்ந்திருக்கிறார்.
Amy Jackson
Amy Jacksonடைம்பாஸ்
Published on

‘ஒப்பன்ஹெய்மர்’ படத்தில் வரும் சிலியன் மர்ஃபியின் தோற்றத்தைப் போல் உள்ள நடிகர் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் ‘மிலன் ஃபேஷன் வீக்’ என்ற நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள திரை பிரபலங்கள், மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மிலன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

அதில் தனது காதலர் எட் வெஸ்ட்விக்குடன் கலந்து கொண்ட நடிகர் எமி ஜாக்சன், வித்தியாசமான தோற்றத்திலும் உடையிலும் காணப்பட்டார். இப்புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இப்படத்தில் எமி ஜாக்சன் நடிகர் சிலியன் மர்ஃபி போல உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

சிலியன் மர்ஃபி அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர் ஆவார். கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான மூன்று 'தி டார்க் நைட் ட்ரையாலஜி' திரைப்படங்கள் மூலமாக உலக அளவில் புகழ்பெற்றார்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான 'peaky blinders' என்ற திரைத்தொடரில் 'டாமி செல்பி' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர, பலருக்கு ஆதர்சமாகவும் சமகால இளைஞர்களுக்கு வைப் மெட்டீரியலாகவும் மாறி போனார்.

பலரின் வாட்சப் ப்ரோஃபைல் இமேஜாக கெத்தாக வாயில் சிகிரெட்டுடன் அமர்ந்திருக்கிறார். அண்மையில், கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'ஒப்பன்ஹைமெர்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr

Amy Jackson
HBD Atlee : From Short Film to Bollywood - Atlee என்கிற அசுர வளர்ச்சியின் கதை! | SRK

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com