Jawan : இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் Anirudh - எவ்வளவு தெரியுமா?

ஜவான் படம் மூலமா நயன்தாராவும், நம்ம ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரனும் இந்தி திரையுலகுக்கு அறிமுகமாகுறாங்க‌‌. தன்னுடைய இந்தி அறிமுக படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கியிருக்காராம் அனி.
Anirudh
AnirudhAnirudh
Published on

நீங்க நினைக்குற எ.ஆர்.ரகுமானோ, ப்ரீத்தமோ கிடையாது ..

ஷாருக்கான் நடிச்சி வெளி வர போற ஜவான் படத்துக்கு இசையமைச்ச அனிருத் தான் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரா ஆகியிருக்காரு.. இந்த படத்துக்கு இசையமைக்க நம்ம அனிருத் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியிருக்காராம்.. இந்த சம்பளம் இந்தியாவின் ஆஸ்கார் நாயகனுடைய சம்பளத்தவிட ரூ‌.2 கோடி அதிகமாம் !

ஷாருக்கானுடய 'ஜவான்' பட டிரெய்லர் எல்லா தளங்கள்லயும் 100 மில்லியனுக்கும் அதிகமான வ்யூஸ் பெற்றிருக்கு‌‌. ஜவான் பட ரிலீஸ்ஸுக்காக ரசிகர்கள் ஆவலா வெயிட் பண்ணிட்டிருக்காங்க‌‌. ஜனவரில வெளியான ‘பதான்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில அபார வெற்றி பெற்றிச்சி. இந்த வெற்றிய தொடர்ந்து, திரை ரசிகர்களுடைய கவனம் இப்போ அட்லீ இயக்கியிருக்க ஜவான் மீதுதான் இருக்கு.

இந்த ஜவான் படம் மூலமா நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், நம்ம ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரனும் இந்தி திரையுலகுக்கு அறிமுகமாகுறாங்க‌‌. தன்னுடைய இந்தி அறிமுக படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கியிருக்காராம் அனி.

Why this kolaveri பாடல் மற்றும் 3 படம் மூலமா தமிழகத்துக்கு பிரபலமான அனிருத் அடுத்தடுத்து நிறைய படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஆல்பம் பாடல்களும் இயக்கியிருக்காரு. முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்காரு அனிருத். ஷாருக்கானின் 'ஜவான்' படத்த தொடர்ந்து தளபதி விஜய்யின் 'லியோ' மற்றும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்', ஜூனியர் என்டிஆரின் தேவாரா, கமல்ஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் அஜீத் குமாரின் 'விடாமுயற்சி' ஆகிய படங்கள்ல கமிட் ஆகியிருக்காரு அனிருத்‌‌.

அடுத்தடுத்து பல படங்கள்ல கைல வெச்சிருக்க நம்ம அனிருத்தான் இந்தியால அதிக சம்பளம் வாங்குற இசையமைப்பாளர் !!

Anirudh
Maamannan Interval : இது கன்னியாகுமரி மாமன்னன் version ! | Vadivelu - Udhayanidhi Stalin
Timepass Online
timepassonline.vikatan.com