Bigg Boss : அடுத்த சீசனுக்கு தயாராகும் அந்த நடிகர் - சிறிய இடைவேளைக்கு பிறகு | Epi 1

இவர் சேனலுக்குச் செல்லப் பிள்ளையெல்லாம் இல்லை. ஆனாலும் 'இந்த முறை எப்படியாவது உள்ளே போகணும், நான் மட்டும் அங்க போனா, அழகா ஹேண்டில் பண்ணுவேன்' எனத் தன் நட்பு வட்டத்தினரிடம் சொல்லி வருகிறாராம்.
Biggboss
BiggbossTimepassonline

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு...

'வந்துட்டீங்களா மகாபிரபு..டிவியிலதான் அஞ்சு நிமிசத்துக்கொரு முறை இந்தக் கொடுமைன்னா, இங்கயுமா?'ங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் வெளியில கேக்குது.
டென்ஷன் ஆகாதீங்க, டைம்பாஸ் வாசகர்களே..
இந்த 'சிறிய இடவேளைக்குப் பிறகு' கூட டிவி தொடர்பானதுதான். ஆனால் நிச்சயம் உங்களை எரிச்சல் படுத்தாது. மாறாக தகவல் தெரிவிக்கும். மகிழ்விக்கும்.
டிவியில உங்களுக்குப் பிடிச்ச நிகழ்ச்சியில் நடக்கிற அப்டேட்டுகள், உங்கள் அபிமான நட்சத்திரங்களின் பர்சனல் பக்கங்கள், பேட்டிகள், ரியாலிட்டி ஷோக்களில் நடக்கும் போங்காட்டங்கள், சீரியல் ஸ்பாட்டுகளில் நடக்கும் அரட்டைகள் என behind the small screen மொத்தத்தையும்  நீங்கள் வாசிக்கலாம்.
வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை வெளியாக இருக்கிறது.
'மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப் படுவீங்க'னு சொல்ல மாட்டோம்.  மாறாக இப்படிச் சொல்லலாம்..
எப்ப வேணாலும் படிச்சுக்கலாம்னா அது ஆறிப்போன காபி. நீங்க ஆவி பறக்க டீ குடிக்க வேண்டாமா? ஸோ, மிஸ் பண்ணாதீங்க.

சரி ஆரம்பிக்கலாங்களா?
கமல் பேசிய இந்த டயலாக்கிலிருந்தே தொடங்குகிறது 'ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு'..
'பிக் பாஸ் சீசன் 6' வணிக ரீதியில் சேனல் எதிர்பாத்த திருப்தியைத் தந்து விட்டதாம். எனவே சம்பந்தப்பட்ட எல்லாருமே செம ஹேப்பி. ('முன்னாடி டைட்டில் வாங்கினவங்கெல்லாம் இப்ப என்னய்யா பண்ணிட்டிருக்காங்க'னு இந்த இடத்துல நீங்க கேக்கக் கூடாது) எனவே உற்சாகத்துடன் உற்சாகமா அடுத்த சீசன் குறித்த அன் -அஃபிஷியல் பேச்சையும் தொடங்கிட்டாங்களாம்.

இந்த முறை தாமதிக்காம, முதல் சீசன் தொடங்கியது போல சரியான தேதியில தொடங்கிடறதுன்னு பேசியிருக்காங்களாம். தொகுத்து வழங்கப் போவது கமல்ஹாசனா அல்லது வேறு யாருமாங்கிற கேள்விக்குள் இன்னும் போகலை. உலக நாயகனே என அடித்துச் சொல்கிறது ஒரு சோர்ஸ். 
நிகழ்ச்சியில் இடம் பிடிக்க, சேனலின் கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் மத்தியில இப்பவே நான், நீன்னு நிகழ்ச்சிக்குச் செல்ல ஆயத்தமாகிற போட்டி தொடங்கிடுச்சாம்.
அதனால, திடீர்னு சோஷியல் மீடியாவுல ஆக்டிவாத் திரியற நிறையப் பேரை நீங்க பார்க்கலாம்.

காசும் கொடுத்து பப்ளிசிட்டியும் தர்றாங்கன்னா யாருக்குத்தான் ஆசை இருக்காது?
நடிகைகள்ல பல பேர் முட்டி மோதத் தயாராகிட்டிருக்க, நடிகர் ஒருவரும் தீவிர முயற்சியில இறங்கி இருக்கிறார் என்பதுதான் நமக்குக் கிடைத்த எக்ஸ்குளூசிவ். இவர் சேனலுக்குச் செல்லப் பிள்ளையெல்லாம் இல்லை. ஆனாலும் 'இந்த முறை எப்படியாவது உள்ளே போகணும், நான் மட்டும் அங்க போனா, அழகா ஹேண்டில் பண்ணுவேன்' எனத் தன் நட்பு வட்டத்தினரிடம் சொல்லி வருவதுடன், 'யாரைப் பிடித்தா ஒர்க் அவுட் ஆகும்' என நிகழ்ச்சிக்குத் தொடர்புடையவர்கள், முன்னாள் போட்டியாளர்கள் என பலரிடமும் பேசி வருகிறாராம்.

'உங்களுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று கூட உண்மையான சில நண்பர்கள் ஓபனாகச் சொன்னார்களாம்.
'அதெல்லாம் இல்ல, என்ன ஆனாலும் பரவால்ல, முந்தின சீசன்ல அசிங்கப்பட்டதும் கோவிச்சுட்டுப் போயிருந்தா அசீமால் இப்ப டைட்டில் வாங்கி இருக்க முடியுமா, அதனால காரியம்தான் முக்கியம்' என சொல்பவர்களையே ஓட விடுகிறாராம்.
சரி, யார் அவர்'ங்கிறீங்கதானே? பேரைச் சொல்லக் கூடாது. ஊரைச் சொன்னாலும் டக்னு கண்டு பிடிச்சிடுவீங்க. ஸோ, ஒரு சின்ன க்ளூ மட்டும்..

'பிக் பாஸ் சீசன் 6'ல் பிக் பாஸ் வீட்டுக்குள் வடிவேலு காமெடியில வந்து போன 'மின்னல்' மாதிரி வந்து போனார் இவர்.
யாருன்னு கண்டு பிடிச்சுடீங்களா? அவசரமே இல்ல, ஆற அமர உட்கார்ந்து கூட யோசிச்சு வைங்க..

அடுத்த வாரம் பார்க்கலாம். - அய்யனார் ராஜன்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com