டைம் பாஸ் 2.0 ரிட்டர்ன்ஸ்

"அனைவருக்குமான ஆட்சின்னு சொல்லி திராவிட மாடலை நாம ட்ரெண்ட் ஆக்குனா, அனைவருக்குமான டைம் பாஸ்னு விகடன் மாடல் ட்ரெண்ட் ஆயிடுச்சே.. !"
டைம் பாஸ்
டைம் பாஸ்

பாகுபலி 2 , கே. ஜி. எப். - 2 , பாமக -2 .௦, விக்ரம் 2 மட்டும்தான் பார்ட் 2 காட்ட வேண்டுமா ? டைம் பாஸ் இதழும் தனது வெர்ஷன் 2 வை ஆன்லயனில் காட்ட வருவது கண்டு சில பிரபலங்களின் கற்பனை மைண்ட் வாய்ஸ் மற்றும் சவுண்ட் வாய்ஸ்.

மு.க.ஸ்டாலின் : அனைவருக்குமான ஆட்சின்னு சொல்லி திராவிட மாடலை நாம ட்ரெண்ட் ஆக்குனா , அனைவருக்குமான டைம் பாஸ்னு விகடன் மாடல் ட்ரெண்ட் ஆயிடுச்சே.. !

கார்த்தி சிதம்பரம் : " ஆறும் அது ஆழம் இல்லை. ..ஆறு தடவை ரெய்டிலும் ஒண்ணும் இல்ல, ஹ்ம்ம்.. , காங்கிரஸுல இருந்தும் ஒண்ணும் நடக்கலை. நெட்பிளிக்ஸ்சிலும் ஒண்ணும் இல்லை. டைம்பாஸுல டைவ் அடிச்சுட்டு வேண்டியது தான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அண்ணாமலை : - இதுவரைக்கும் இருபதாயிரம் புஸ்தகம் படிச்சாச்சு.. டைம்பாஸ் படிச்சா இருப்பதாயிரத்தி ஒண்ணு.. சூப்பர் .. அண்ணாமலை நீயெல்லாம் இங்க இருக்கவேண்டியரு இல்லை. எங்கேயோ இருக்கவேண்டியது ! அப்படியே நான் கெஸ்ட் ரோல்ல நடிச்ச அரபி படத்தை பத்தி டைம்பாஸில கொஞ்சம் ப்ரோமோ பண்ணுங்கப்பா.

சசிகலா : நாம ஆடியோ ரிலீஸ் விட்டு பரபரப்பு ஆக்குனா..விகடன் டைம் பாஸ் ரிலீஸ் பண்ணி நமக்கு கவுன்ட்டர் கொடுக்குறாங்களே..

செல்லூர் ராஜு : இது என்னடா வம்பா போச்சு.. ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் நாம தான் என்டெர்டெயின்மென்ட்டுன்னு நெனச்சா டைம் பாஸ் நமக்கு டஃ ப் கொடுப்பாங்க போலிருக்கே .. எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்.. இல்லைனா நம்மள வச்சு செஞ்சிடுவாங்க !

அண்ணாச்சி : வந்தாச்சு , வந்தாச்சு .. சம்மர் வந்தாச்சு.. சம்மர் ஸ்பெஷல் , ஆடி ஸ்பெஷல், விண்ட்டர் ஸ்பெஷல் டைம் பாஸ் வந்தாச்சு.. பிடிச்சுக்கோ .. படிச்சுக்கோ ....

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி : வந்தாச்சு , வந்தாச்சு .. சம்மர் வந்தாச்சு.. சம்மர் ஸ்பெஷல் , ஆடி ஸ்பெஷல், விண்ட்டர் ஸ்பெஷல் டைம் பாஸ் வந்தாச்சு.. பிடிச்சுக்கோ .. படிச்சுக்கோ ....

உதயநிதி ஸ்டாலின் : அடடா.. "டைம்பாஸ் " .. ட்ரெண்டியா இருக்கே நல்லாயிருக்கே.. காப்பி ரைட் கேட்டு ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் புது படத்துக்கு டைட்டிலா வச்சுடலாமே ! . இளைஞர் அணி ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குது.. டைம் பாஸ் வாங்கி கொடுத்து ரிலாக்ஸ் பண்ண வைக்கலாம்.

மோடி : டைம்பாஸ் வாசகர்களுக்கு வணக்கம். கல்தோன்றி மன் கி பாத் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தது டைம்பாஸ் இதழ். வெகு விரைவில் தமிழ் மக்களின் மனம் கவர , மண் மணக்கும் தமிழில் நான் டைம்பாஸ் இதழில் என் சுயசரிதையை எழுதுவேன்.. மக்களே.. ஏன் ஓடுகிறீர்கள் ?

மோடி
மோடி

கமல்ஹாசன் : ஆண்டவனை இருந்திருந்தால் டைம் பாஸுக்கு தான் உலகை படைத்திருப்பான். ஆனால் இந்த ஆண்டவருக்கே சமயத்தில் டைம் பாஸ் ஆகாத போது , டைம் பாஸ் படித்து தான் ஆக வேண்டும். டைம் பாஸ் சிரிப்பாக , மன்னிக்கவும் சிறப்பாக வெளிவந்தால் குழுவினர் அனைவர்க்கும் டைம் பார்க்க ரோலக்ஸ் கடிகாரம் பரிசளிக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். டைம் பாஸில் இருந்து யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

எடப்பாடி பழனிச்சாமி : சேக்கிழார் எழுதுற டைம் பாஸ் சாரி, ஒரு ப்ளோவுல வந்துடுச்சு.. விகடன் டைம்பாஸுல அம்மா காலத்துல ஆரம்பிச்ச பத்திரிகை. அதுனால அதிமுக தான் தமிழகத்தின் ஒரே எதிர்கட்சின்னு டைம்பாஸுல அழுத்தம் தரணும். பாஜக , பாமக தான் எதிர்கட்சின்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்புங்க !

ஓபிஎஸ் : இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். சின்னம்மா அவர்களை அதிமுகவில் சேர்த்தால் தான்... (கட்.. கட் ... எடப்பாடி ஒயரை பிடுங்கிவிடுறார்.

ஐ. லியோனி : டைம் பாஸ் இதழில் பள்ளி குழந்தைகளுக்கேற்ப மாற்றம் செய்து , டைம் டேபிள் போட்டு தினமும் படித்து மகிழும் படி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவராக நான் உறுதி கூறுகிறேன்.

மதுரை ஆதீனம் : டைம் என்றால் காலம். பாஸ் என்றால் கடந்து செல்வது அல்லது தலைவன். காலத்தை கடந்த தலைவன் என்றால் சிவன் தான். சிவனை பற்றி சிந்தித்தால் மட்டுமே டைம் பாஸ் ஆகிவிடும். டைம் பாஸில் விஜய்யை பற்றி மட்டும்

அன்புமணி ராமதாஸ் : முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சரா சொல்றேன்.. மக்களுக்கு ஆரோக்கியம் வேணும்னா, நல்லா சிரிக்கணும், சிரிக்கணும்னா டைம் பாஸ் படிங்க. பாமகவை பாத்து சிரிக்கிறவங்க கொஞ்சம் டைம்பாஸ் படிச்சு சிரிக்கணும். ஓவியா ஆர்மி எல்லாம் இனி டைம் பாஸ் ஆர்மியாக வேண்டும். சிரிச்சாப்புலயும் இருக்கும் , ஆரோக்கியம் கெடச்சாப்புலயும் இருக்கும்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இல்லை, இல்லை மாம்பழம்..

ராமதாஸ்
ராமதாஸ்

இயக்குனர் அட்லீ : அடுத்த படம் ஒரு காமெடி ஸ்க்ரிப்ட். டெம்ப்லேட் தேடிகிட்டு இருந்தேன். டைம்பாஸ் வந்துடுச்சு.. நோ ஒரி . நாலு காமெடி ஸ்டோரிய எடுத்து படமாக்கிடவேண்டியது தான்.. தேங்க் காட்.

சீமான் : டைம் பாஸ் என்ன பிரமாதம் ? நான் சொல்லுற டைமிங் ஜோக்கை விடவா இருந்துடப்போகுது. டைம் பாஸுக்கு என்னைய எடிட்டரா போடுங்க.. அப்புறம் தெரியும் ஸ்டோரி ... பட்டய கெளப்புறேன். புஹாஹா...


நெல்சன் திலீப்குமார் : டைம் லூப் கதை தான் மக்களுக்கு தெரியும். அடுத்த படத்துல ஹீரோவை டைம் மெஷின்ல உக்கார வச்சு காலம் கடந்து போற டைம் பாஸ் பத்தி ஜாலியோ ஜிம்கானா கதை ரெடி. அதை பாக்க மக்கள் ரெடியா ?

பிரஷாந்த் கிஷோர் : டைம்பாஸ் , ஐபேக் காம்போ செமயா ஒர்க் அவுட் ஆகா போகுது. அடுத்த இருபத்தியஞ்சு வருஷத்துக்கு தமிழ்நாட்டுல டைம்பாஸை அசைச்சுக்கமுடியாது. என் புது கட்சி டைம்பாஸ் கூட கூட்டணி அமைக்கும் ( தலைவரே டைம் பாஸ்ன்றது ஒரு பத்திரிகை , கட்சி இல்லை என்று பின்னணி குரல் )

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com