தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

புதுசா அறிமுகமாகிற தெலுங்கு ஹீரோகூட “நான் அடிச்சா சூரியனே சிதறும். செவ்வாயே பதறும்’’னு பன்ச் பேசுவார்.
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமாதமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா
Published on

தமிழ் சினிமாவுக்கும் தெலுங்கு சினிமாவுக்கும் உள்ள சில வித்தியாசங்களைப் பார்ப்போமா?

தமிழ் சினிமா :

சண்டைகளில் தமிழ் ஹீரோக்கள் கத்துற கத்துல, நம்ம டி.வி ஸ்கிரீன் உடைஞ்சிடுமோனு பயத்துலேயே பார்த்துட்டிருப்போம்.

பெரும்பாலும் ஹீரோ கையை முறுக்கி, தொடையைத் தட்டி சண்டைக்கு ரெடியானாதான் வில்லனோட அடியாட்கள் பக்கத்துல இருக்கிற கண்ணாடியை உடைச்சிட்டு தூரப்போய் விழுவாங்க.

கதைக்குத் தேவைனா மட்டும்தான் கவர்ச்சி காட்டுவோம்னு ஹீரோயின்கள் சொல்வாங்க.

ரொம்பநாளா சினிமாவுல இருக்கிற சில மாஸ் ஹீரோக்கள்தான் பன்ச் டயலாக் பேசுவாங்க.

அடிக்கடி காமெடி ட்ரெண்ட் மாறும். காமெடியன்களும் மாறுவாங்க. ஹீரோவையே கலாய்ப்பதும் உண்டு.

தமிழ் சினிமாவுல என்ட்ரி ஆகி, அப்புறம் தெலுங்குப் பக்கம் போய் ஹிட்டான ஹீரோக்கள் நிறைய.

கிராஃபிக்ஸ்ல நிறைய முன்னேற்றங்கள் வந்தாலும் வரலாற்றுக் கதைகளும் பக்திப் படங்களும் எப்போவாச்சும் உண்டு.

ஹீரோயிஸம், பெரிய பட்ஜெட், நாலஞ்சு சண்டை இந்த மாதிரியான நம்பவே முடியாத காட்சிகள் இருக்கிற சூழல்ல இருந்து தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமா நம்பத்தகுந்த சினிமாவா மாறிட்டு வருது.

தெலுங்கு சினிமா:

சண்டைக் காட்சியில ஹீரோ சத்தம் போட ஆரம்பிச்சா, நம்ம வீட்டு டி.வி ஸ்கிரீன் மட்டும் இல்லாம பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு டி.வி ஸ்கிரீன்களும் உடைஞ்சிடுமோனு ஒருவித பதட்டத்தோடவே படம் பார்ப்போம்.

ஹீரோ ஒரு சொடக்குப் போட்டாலே படத்துல இருக்கிற அடியாட்கள் மட்டும் இல்லாம பக்கத்து தியேட்டர்ல ஓடிட்டிருக்கிற வேறொரு படத்துல இருக்கிற அடியாட்கள் கூட பறந்து போய் நிலாவில விழுந்துடுவாங்க.

கதை பத்தி எல்லாம் இங்கே கேள்வியே இல்லை. தமிழ் சினிமாவில ரொம்ப பவ்யமா நடிக்கிற நடிகைகள்கூட இங்கே டூ பீஸ்தான்.

புதுசா அறிமுகமாகிற ஹீரோகூட “நான் அடிச்சா சூரியனே சிதறும். செவ்வாயே பதறும்’’னு பன்ச் பேசுவார்.

ஒரே மாதிரியான காமெடிகள்தான் இங்கே அதிகம். அது காமெடி சீனுன்னு பக்கத்துல ஒருத்தர் சொன்னாதான் புரியும்.

தெலுங்குல என்ட்ரி ஆகி தமிழ் சினிமாவுல ஹிட்டடிச்ச நடிகைகள் இருந்தாலும் நடிகர்கள் இல்லைனுதான் சொல்லணும்.

கிராஃபிக்ஸ் உதவியால வரலாற்றுப் படங்களும் பக்திப் படங்களும் அடிக்கடி வந்து டார்ச்சர் பண்ணும்.

கடல்ல மூழ்கிட்டு இருக்கிற கப்பலை ஒரு கையால தூக்கிப் பிடிச்சிட்டும் இன்னொரு கையால ட்ராக் மாறிப்போற ரயிலை இழுத்துப் பிடிச்சிட்டும், ரெண்டு காலாலேயும் எதிரிகளைப் பந்தாடிட்டும் இருக்கிற ஹீரோயிஸக் கதைகள்தான் வந்துட்டு இருக்கு!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com