எல்லோரையும் புரட்டி எடுத்துப் புரோட்டா பிசையும் இயக்குநர் பாலாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். அவரோட டவுசர் காலத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்வோமா?
லீவ் லெட்டரில் கூட, ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என எழுதாமல், ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் சைக்கோ’ என எழுதி வாத்தியார்களைக் கதிகலங்க வைத்திருப்பார்.
தன்னை அடித்த வாத்தியாரின் பிரம்பைப் பறித்துத் திரும்ப ஸ்கூல் டாய்லெட்டுக்குள் விரட்டி பயமுறுத்திய சம்பவம் உண்டு.
கொட்டாங்குச்சி, பனங்காய், போண்டா... இந்த ஹேர் ஸ்டைல்களிலும் சமயங்களில் இவை எல்லாவற்றையும் கலந்து கட்டிய ஹேர் ஸ்டைல்களிலும் வந்து ஒட்டுமொத்தப் பள்ளிக்கூடத்தையும் மெர்சலாக்கியிருப்பார்.
ஃபேவரைட் ஸ்பாட்டே சுடுகாடுதான். பல்லாங்குழி, கிட்டிப்புல், பம்பரம் எல்லாமே சுடுகாட்டில்தான் விளையாடி இருப்பார். ஆட்டத்துக்கு யார் வராவிட்டாலும் தனியாளாக விளையாடிக் குடும்பத்தையே பயமுறுத்தி இருப்பார்.
ஃபெயிலானதால் மண்டையில் குட்டிய வாத்தியாரைப் பார்த்து வெகுண்டெழுந்து, ‘லூஸாப்பா நீ?’ எனக் கேட்டதால், வாத்திகள் ரவுண்ட் கட்டி வெளுத்திருப்பார்கள். ஓட்டப் பந்தயத்தில் கையை வீசி ஓடாமல் அட்டென்ஷனில் குடுகுடுவென ஓடியிருப்பார்.
வீட்டில் எத்தனை யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்தாலும் வாரத்துக்கு ஒரே சட்டையையும் டவுசரையும் போட்டு அழுக்கோடு பள்ளிக்கூடம் போவதைப் பெருமையாக நினைத்திருப்பார்.
சத்துணவு சாப்பாடு நிறையக் கொடுக்காவிட்டால், துரத்தி துரத்தித் தட்டாலேயே சத்துணவு வாத்தியை அடி வெளுத்திருப்பார்.
வீட்டில் இருந்தால் நாள் முழுவதும் விட்டத்தைப் பார்த்து படுத்துக்கிடப்பதும் வெளியே கிளம்பிப் போனால் லங்கர், லேகிய வியாபாரி, கழைக்கூத்தாடி, நடன நாட்டியக் குழு என யார் பின்னாலாவது கூடவே சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்.
டீச்சர் சொல்லிக் கொடுத்த ரைம்ஸை மறந்து மயான ரைம்ஸான, ‘நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப் புள்ள...’யை அப்பவே மனப்பாடமாய் ஒப்பித்து எல்லோரையும் கடுப்பேற்றியிருப்பார்!