Ajith Kumar : ‘அஜித்னா யாரு?’ - தெரியாமல் கேட்ட துரைமுருகன் - வறுத்தெடுக்கும் Ajith Fans!

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கியிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் அஜித், தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி..
Ajith Kumar
Ajith Kumartimepass
Published on

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நக்கலாக பதிலளித்து ‘தக் ஃலைப்’ செய்வதில் பெயர் பெற்றவர் அமைச்சர் துரைமுருகன். அவரின் நக்கல் பேச்சுக்கும் நையாண்டியான உடல்மொழிக்கும் சமூக வலைதளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், அண்மையில் யூடியூப் சேனல் ஒன்று நடத்திய சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரிடம், "அஜித்தின் படங்களைப் பார்ப்பீர்களா?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன், "அஜித்னா யாரு?" என்று கேள்விக் கேட்ட நெறியாளரை நோக்கி மறுகேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் காணொளி துனுக்கு சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பல லட்சம் ரசிகர்களின் ஆதர்சமாகவும் திகழ்பவர் அஜித் குமார். அவ்வாறு இருக்க, அமைச்சர் துரைமுருகனின் பதில் அஜித் ரசிகர்களை கோபமாக்கியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கியிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தின்போது, 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் விழா நடந்தது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் அஜித், தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி இந்நிகழ்ச்சி வரவழைத்தார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதை கேட்ட ரஜினிகாந்த், எழுந்து நின்று கை தட்டியது, திரையுலகிலும் அரசியல் களத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அந்தக் காணொளியையும் துரைமுருகனின் கேள்வியையும் இணைத்து, ஜெயிலர் ஹுக்கும் பாடலோடு வைரலாக்கி வருகின்றனர்.

Ajith Kumar
Shalini Ajith : TMS குரலில் பாடி நடிக்கும் ஷாலினியின் அப்பா பாபு - Youtube Channel தொடங்கி அசத்தல்!
Timepass Online
timepassonline.vikatan.com