தமிழ் சினிமா
தமிழ் சினிமா டைம்பாஸ்

தமிழ் சினிமா கத்துக்கொடுத்த இங்கிலீஷ் - ஒரு லிஸ்ட்

‘ஆஹா ஆளு பல்க்கா இருக்காரேய்யா, கன்னம் பன்னு மாதிரியாகி தேஜஸ் ஆகிடும்’ ‘சிங் இன் த ரெயின்’, ‘மீ கோ தேவா கம்’, ‘வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங் அபவுட் மீ’, ‘ஹவ் டூ ஐ டெல் யூ’.
Published on

நாம் பள்ளியில் கத்துக்கிட்ட ஆங்கிலத்தை விட படம் பார்த்துக் கத்துக்கிட்ட ஆங்கிலம்தான் அதிகம். அப்படி எந்தெந்த நடிகர்கள் நமக்கு சிறப்பா இங்கிலீஷ் கத்துக் கொடுத்திருக்காங்கனு அகழ்வாராய்ச்சியில் இறங்குவோமா?


வடிவேலு பேசாத இங்கிலீஷா? ‘ஆஹா ஆளு பல்க்கா இருக்காரேய்யா, கன்னம் பன்னு மாதிரியாகி தேஜஸ் ஆகிடும்’ ‘சிங் இன் த ரெயின்’, ‘மீ கோ தேவா கம்’, ‘வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங் அபவுட் மீ’, ‘ஹவ் டூ ஐ டெல் யூ’னு ஒரிஜினல் இங்கிலீஷ் டீச்சரே சொல்லிக் கொடுக்காத ஏகப்பட்ட வார்த்தைகளை நமக்குக் கற்றுத்தந்தவர் வைகைப் புயல்.

‘பார்டன்’ இந்த வார்த்தையை ‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியாவும் ‘சூரியன்’ படத்தில் கவுண்டரும் பல வருஷத்துக்கு முன்னாடியே பேசிட்டாங்க. ஆனா ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நயன்தாரா பேசினதும்தான் நமக்கெல்லாம் இப்படி ஒரு வார்த்தை இருக்கிறதே தெரிய வந்துச்சு. லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா?

‘அயன்’ படத்தில் சூர்யா ஷூவை பொன்வண்ணன் கிழிச்சு பார்த்துட்டு ‘ஸாரி... தப்பா செக் பண்ணிட்டோம் நீங்க போகலாம்’னு சொல்ல, ‘எப்படிப் போறது வெறும் கால்லேயா? ஹவ் டு கோ லைக் திஸ்?’னு அவருக்கே உண்டான பந்தாவான டோனில் சீன் காட்டுவார்.

எல்லாருக்கும் குருநாதர் மேஜர் சுந்தர்ராஜன்தான். ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் ‘தீவிரவாதிகளை அழிக்க எனக்கு போலீஸ் வேண்டாம்’னு அர்ஜுன் சொல்ல, அதுக்கு மேஜர் ‘முன்னெச்சரிக்கையா சிலரை சந்தேகப்படலாம்; தட் இஸ் மெடிசன். பட் முழுக்க எல்லாரையும் சந்தேகப்பட்டா, தட் இஸ் பாய்சன்’னு தமிழ், இங்கிலீஷ் மாத்தி மாத்தி வகுப்பெடுப்பார்.

கேப்டன் விஜயகாந்த் ‘வானத்தைப்போல’ படத்தில் ஒரு பெண்ணை கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைப்பது என்பதை ‘ஐ வான்ட்டு மேரி யூ’னு சொல்லியிருப்பார்.

‘தேவன்’ படத்தில் ‘மிஸ்டர் அஷோக் எவ்ரிதிங் ஷுட்பி இன் அவர் கன்ட்ரோல்’னு மூச்சுவிடாமல் பேசி மிரட்டியிருப்பார். சொல்ல மறந்துட்டேன் ‘ஐ வில் பைண்ட் யூ அண்ட் கில் யூ’ இதையும் அவர் கணக்குல சேர்த்துக்கோங்க.

கடைசியா ‘ஐ நோ’ என்பதை ரகுவரனும் ‘லெஸ் டென்ஷன் மோர் வொர்க்’ என்பதை செந்திலும் சொல்லிருக்காங்க!

Timepass Online
timepassonline.vikatan.com