பழைய படங்களை டிஜிட்டல்ல ரிலீஸ் பண்ற மாதிரி, காலத்தால் அழியவே அழியாத இந்த டயலாக்ஸையும் கொஞ்சம் ஃபேஸ்புக் டெக்னாலஜி யூஸ் பண்ணி அப்டேட் பண்ணுவோமா?
‘யாரைக் கேட்கிறாய் லைக், எதற்குக் கேட்கிறாய் கமென்ட், ஃப்ரெண்டா, ஃபாலோயரா... அன்ஃப்ரெண்டானவனே. நாங்கள் போடும் ஸ்டேட்டஸுக்கு எல்லாம் லைக் போட்டாயா? ஆகா, ஓகோவென புகழ்ந்து கமென்ட் போட்டாயா? நாங்கள் போடும் ஸ்டேட்டஸை ஷேர் செய்தாயா? இல்லை, அங்கே கொஞ்சி விளையாடும் அழகுப் பெண் தோழிகளை சஜஸ்ட்தான் செய்தாயா?’
‘ஆத்தா தமிழ் புக் வாங்கிக் குடுத்தா, இங்கிலீஸ் புக் வாங்கிக் குடுத்தா, ஏன், செக்புக் கூட வாங்கிக் குடுத்தா. ஆனா இந்த ஃபேஸ்புக் மட்டும் வாங்கிக் குடுக்கலே’
‘ஸ்டேட்டஸ் போட்ட உடனே லைக் விழணும்னு நினைச்சா முடியுமோ? முதல்ல உன்னோட ஃப்ரெண்டு போடுவான், அப்புறம் அவன் ஃப்ரெண்டு போடுவான். ஆனா ஸ்டேட்டஸ் யாரு போட்டது... நீ போட்டது’
‘எதுக்குடா நீ போட்ட ஸ்டேட்டஸ்ல என்னை டேக் பண்ண? சந்தேகப்படுறியா. நட்புனா என்னன்னு தெரியுமா ஃபேஸ்புக்குனா என்னன்னு தெரியுமா? நான் ஃபேஸ்புக் வந்ததே உனக்காகத்தாண்டா... அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது. வேணும்னா எனக்கு வர்ற லைக்கையும் நீயே எடுத்துக்கோ... எடுத்துக்கோ.’
‘ஃபேஸ்புக்ல ஆன்லைன்ல இருக்கவனுங்க எண்ணிக்கை 25 பேர், அதுல ஃபேக் ஐ.டி எட்டு பேர், பொண்ணுங்ககிட்ட கடலை போடுறவன் பத்து பேர், எப்பவும் லைட் எரிஞ்சிக்கிட்டு இருக்கிறவன் அஞ்சு பேர், மீதி ரெண்டு பேர். அவனும் ஸ்டேட்டஸும் போடாம, அடுத்தவன் ஸ்டேட்டஸுக்கும் லைக்கும் போடாம இருப்பானுங்க. ஆங்!’
‘நான் ஃபேஸ்புக் வேணாம்னு சொல்லலை, இல்லன்னா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்.’
‘இங்கே இருக்கிற எவனும் இவ்ளோ அழகா...... இவ்ளோ அழகான புரொஃபைல் பிக்சரைப் பார்த்திருக்க மாட்டான். ஐயம் இன் லவ் வித் யூ!’