இங்கார்ரா நம்ம சினிமா போலீஸ்ஸு

எங்கோ மேப்பில் இல்லாத ஊரில் S.I-யாக இருந்தாலும் ஓங்கி அடிக்கும் திறமையால் ஒரே நாளில் சர்வதேச குற்றவாளிகளைப் பிடிக்கும் உயரதிகாரியாக பதவியுயர்வார்.
Kollywood heros
Kollywood heros

போலீஸ்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு நெஜ போலீஸ், இன்னொன்னு சினிமா போலீஸ். சரி.. சினிமால ஒரு போலீஸ் எப்டியெல்லாம் வருவார்னு பாப்போம்.

  • காக்கி சட்டைக்கு போட்டது போக 2 டம்ளர் கஞ்சி உள்ளே விட்டது போல எப்போதும் விரைப்பாக நிற்பார்.

  • வேனக் கட்டி வந்தது போல் கைகள் உடம்பை விட்டு கொஞ்சம் தள்ளி அந்தரத்தில் நிற்கும்.

Vishal - Simbu - Madhavan
Vishal - Simbu - Madhavan
  • செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு லேட்டாய் தூங்கி எழுந்தவனை போல் கண்கள் எப்போதும் கோவை பழமாய் சிவந்திருக்கும்.

  • பார்க்கத்தான் போலீஸ், ஆனால் பொறுக்கியாகவும் மாறி பீர் வித் இட்லி சாப்பிடுவார்.

அத்தனை பரபரப்புக்கு இடையிலும் லவ் பண்ணவும் டூயட் பாடவும் நேரம் ஒதுக்குவார்.

அனாவசியமாய் அப்பாவையும் அம்மாவையும் நேர்மைக்காக பழி கொடுப்பார்.

Kollywood heros
Kollywood heros
  • எங்கோ மேப்பில் இல்லாத ஊரில் எஸ்.ஸையாக இருந்தாலும் ஓங்கி அடிக்கும் திறமையால் ஒரே நாளில் சர்வதேச குற்றவாளிகளைப் பிடிக்கும் உயரதிகாரியாக பதவியுயர்வார்.

  • வட்டமேஜை மாநாட்டில், "இதுக்கெல்லாம் ஒருத்தர் இருக்கார். இப்ப சஸ்பென்ஷன் இருக்கார். அவர் வந்தா கேஸ ஈசியா டீல் பண்ணுவார்" என எக்கச்சக்க பில்டப்போடு நாயைக் குளிப்பாட்டும் ஹீரோவைக் காட்டுவார்கள்.

    - ஆர்.சரண்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com