90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே சூப்பர் ஹீரோன்னா அது சக்திமான் தான்.. ஞாயிற்றுக்கிழமை 11:30 மணி ஆச்சினா சக்திமான் பாக்குறதுக்கு வீடு வீடா சுத்தின நினைவுகள்ல மறக்க முடியுமா ??
சக்திமான் தொடர்ல கங்காதர் கதாபாத்திரத்தில மூக்கு கண்ணாடி போட்டுகிட்டு அப்பாவியாவும், சக்திமான் கேரக்டர்ல அசாத்தியமான வீரனாவும் நடிச்சி அசத்தியிருப்பாரு முகேஷ் கண்ணா.
சக்திமான் நாடகத்த பாத்துட்டு, "நானும் சக்திமான் தான், எனக்கும் சக்தி இருக்கு"னு அலப்பறை பண்ணாத 90'ஸ் கிட்ஸ் இல்லவே இல்லை.. சக்திமான் ட்ரஸ்ஸ எங்கேயாவது பார்த்தா, அடம் புடிச்ச வாங்கி அந்த ட்ரஸ்ஸ போட்டு, போட்டோ எடுத்து பிரெண்ட்ஸ் கிட்ட காட்டி சீன் போட்ட 90'ஸ் கிட்ஸ்சும் நிறைய பேர் இருக்காங்க.
இத்தனை வருஷத்துக்கு அப்புறம் சக்திமான் நாடகம் வெள்ளித்திரைல படமா உருவாக போகுதுன்ற தகவல் வெளியாகியிருக்கு. சக்திமானா நடிச்ச முகேஷ் சமீபத்துல ஒரு பேட்டி கொடுத்தாரு... அதுல, “ சக்திமான் படம் சர்வதேச தரத்துல உருவாக போகுது.. கிட்டத்தட்ட 200 - 300 கோடி பட்ஜட்ல மிகப் பிரம்மாண்டமா தயாராக போகுது. சோனி நிறுவனம் இந்த படத்த தயாரிக்க போறாங்க” என்று பேட்டி கொடுத்தாரு.
சக்திமான் நாடகம் திரைப்படம் ஆக போறதா கொஞ்ச நாளைக்கு முன்னாடியே தகவல் கிடைச்சது... இந்த நிலையில் முகேஷ் கண்ணா கொடுத்த பேட்டியில கொரோனா காரணமா தான் படத்துக்கான தயாரிப்பு வேலை தாமதமானதாகவும் ,கூடிய சீக்கிரத்துல படத்த பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்துல யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில நடிக்க போறாங்கன்ற அறிவிப்பும் வெளிவரும்னு முகேஷ் கண்ணா சொல்லியிருக்காரு.
90ஸ் கிட்ஸ் தொலைக்காட்சியில பார்த்து பிரம்மிச்ச சூப்பர் ஹீரோ, 2K கிட்ஸ்க்கு தியேட்டர்ல காட்சியளிக்க போறாரு.. எதுல எப்படி வந்தாலும் நம்மளுடைய ஃபர்ஸ்ட் சூப்பர் ஹீரோ சக்திமான் தான் !!!
உலகாளும் மாவீரன் தான் இங்கே !! புகழ் கேள் இங்கே !!
புவி பேசும் நம் விதி மாறும்தானடா !!
சக்திமான் சக்திமான் !!