HBD Kamal Haasan : எந்திரன் கமல், 27 வயதில் 100 படம் - கமல் ஹாசன் பற்றிய 10 உண்மைகள்!        

வளர்ந்து வரும் நடிகர்கள் இந்த விருதை வெல்வதற்கு பிலிம்பேர் சங்கத்தில் இருந்து தனது பெயரை அவரே வாபஸ் பெற்றார். தனக்கு மீண்டும் இந்த பிலிம்பேர் விருதை வழங்க வேண்டாம் என்று கடிதமும் எழுதினார்.
கமல்
கமல்டைம்பாஸ்
Published on

ராமநாதபுரம் உள்ள பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசன் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதிகளுக்கு மகனாக நவம்பர் 7, 1954 ஆம் ஆண்டு கமல்ஹாசன் பிறந்தார்.    

நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்தை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்ட கமல்ஹாசனைப் பற்றி பலரும் அறியாத பத்து உண்மைகள்...!


1. முதல் படத்திலேயே ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றார்
   

தனது 6 வயதில் ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் அனாதைக் குழந்தையாக நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நடிகருக்கான அப்போதையை ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றார்.

2. அதிக மொழிகள் பேசும் ஓரே நடிகர்   

கமல்ஹாசன் தாய் மொழியான தமிழ் உட்பட ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி, கன்னடம் மற்றும் பிரஞ்சு போன்ற 8 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

3. ஒரே படத்தில் பல விதமான வேடங்கள்       

இந்திய சினிமாவில் ஒரே படத்தில் பல விதமான வேடங்களில் நடித்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. 2008 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் படத்தில் பத்து வித்தியாசமான வேடங்களில் நடித்தார்.

4. அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகர்  

1988 முதல் 1998 வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகராக கமல்ஹாசன் இருந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு படத்திற்கு மடடும் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற வரலாற்றையும் படைத்தார். அதற்கு முன்னர் ராஜேஷ் கண்ணா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கி வந்தனர்.

கமல்
கமல் என்னிடம் அடி வாங்கினார் - எம்ஜிஆர் மக்கள் கட்சி விஸ்வநாதன் பேட்டி

5. அதிக வெவ்வேறு மொழித் திரைப்படங்கள் நடித்தவர்    

தற்போது உள்ள நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று மொழிகளில் நடித்திருந்தாலும், அந்த காலத்திலேயே தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி ஆகிய ஆறு மொழிகளின் படங்களில் நடித்த ஒரே இந்திய நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. 

6. ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட அதிகப் படங்கள்

இதுவரை ஹேராம், இந்தியன், குருதிப்புனல், தேவர் மகன், நாயகன், சாகர், ஸ்வாதி முத்யம் என்று 7 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டன. இதில் 5 தமிழ் படங்களும், ஹிந்தி மற்றும் தெலுங்கு தலா ஒரு படமும் அடங்கும்.

7. அதிக பிலிம்பேர் விருதுகளை வென்ற நடிகர்கள்    

இந்திய சினிமா வரலாற்றில் அதிக பிலிம்பேர் விருதுகளை வென்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் ஆவார். இவர் 17 தமிழ் மற்றும் 2 இந்தி பிலிம்பேர் விருதுகள் உட்பட மொத்தம் 19 விருதுகளை வென்றுள்ளார். பின்னர் 2000 ஆம் ஆண்டு வளர்ந்து வரும் நடிகர்கள் இந்த விருதை வெல்வதற்கு பிலிம்பேர் சங்கத்தில் இருந்து தனது பெயரை அவரே வாபஸ் பெற்றார். தனக்கு மீண்டும் இந்த பிலிம்பேர் விருதை வழங்க வேண்டாம் என்று கடிதமும் எழுதினார்.

8. குறைந்த வயதில் அதிக படங்கள் நடித்தவர்

கமல்ஹாசன் 233க்கும் அதிகமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும், அவரின் 100வது படமான ராஜ பார்வையில் திரைப்படம் நடிக்கும்போது அவருக்கு வயது 27. எனவே குறைந்த வயதில் 100க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த இந்தியாவின் ஒரே நடிகர் என்ற பெருமையை கமலையே சாரும்.

9. தமிழ் சினிமாவில் நவீன புதிய டெக்னாலஜியை அறிமுகப்படித்தியவர்

   கமல்ஹாசன் முதன்முறையாக குணா திரைப்படத்தில் ஸ்டெடி கேமரா, ஆளவந்தானில் மோஷன் கிராபிக்ஸ் கேமரா, குருதிப்புனலில் டால்பி சவுண்ட் சிஸ்டம், மும்பை எக்ஸ்பிரஸில் டிஜிட்டல் கேமரா, மைக்கேல் மதன காமராஜனில் மார்பிங் தொழில்நுட்பம், ராஜ பார்வையில் அனிமேஷன் டெக்னாலஜி, விருமாண்டியில் நேரடி டப்பிங்கை போன்றவ நவீன டெக்னாலஜியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

10. இயக்குனர் ஷங்கரின் முதல் விருப்பம்

    ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தை 1998-லேயே கமல் மற்றும் ப்ரீத்தி சிந்தாவை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால், 2010 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியானது.

- மு.குபேரன்.

கமல்
HBD Kamal Haasan: டைம்பாஸ் ஸ்பெஷல் கமல் கார்டூன்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com