Kushboo : குஷ்புவிற்கு கோயில் கட்டியது உண்மையா ? - ஒரு Ground Report !

ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே! அந்தக் கோயிலும் கட்டியவர்களும் என்னதான் ஆனார்கள்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசாரணையில் இறங்கியதில்.
குஷ்பு
குஷ்பு டைம்பாஸ்
Published on

கற்பு தொடங்கி, கட்சித் தலைமை வரை... மனதில் பட்டதைச் சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் குஷ்பு. இப்போது குஷ்புவை எதிர்ப்பவர்கள் பலர் இருந்தாலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த குஷ்புவைத்தான் தமிழ்நாடு என்னமாய் கொண்டாடியது! அதிலும் குஷ்பு கோயில்..?

உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே! அந்தக் கோயிலும் கட்டியவர்களும் என்னதான் ஆனார்கள்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசாரணையில் இறங்கியதில்...

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சுமார் அரை மணி நேரப் பயணத்தில் உள்ளது குண்டூர் பர்மா காலனி.

இங்குதான் குஷ்புக்குக் கோயில் கட்ட முயற்சித்த தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டுச் சென்றோம். கோயில் கட்டுவதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களுள் ஒருவரான பாபு முதலில் தயங்கினாலும் பிறகு பேசத் தொடங்கினார்.

குஷ்பு
'வடகொரிய அதிபர், ஒபாமா கோபம், மக்கள் எதிர்ப்பு' - ‘தி இன்டர்வியூ’ எனும் கொரிய சினிமா!

'ஒரு தீபாவளிக்கு முதல் நாள் நைட்டு. திருச்சி மாரீஸ் தியேட்டர்ல படம் பார்த்துட்டு வர்றோம். அப்பதான் எங்க செட்டுல இருந்த பவுல்ராஜ் 1,000 பிட் நோட்டீஸ் அடிச்சு எடுத்துட்டு வந்து தந்தான். ஏற்கெனவே அவன் படத்துக்கு வரலைங்கற கோபத்துல இருந்த நாங்க அந்த நோட்டீஸைப் படிச்சுக்கூடப் பார்க்காம பாலத்துக்குக் கீழே வீசி எறிஞ்சோம். அப்புறமா நோட்டீஸைப் பாத்தா குஷ்புக்குத் தேவாலயம் கட்டப்போகிறோம். தங்களால் இயன்ற உதவியைச் செய்யவும்னு இருந்துச்சு. இது நாங்க விளையாட்டுக்குப் பேசிக்கிட்டு இருந்த விஷயம். அவன் சீரியஸா எடுத்துக்கிட்டு நோட்டீஸே அடிச்சுட்டு வந்துட்டான். சரினு நாங்களும் மிச்சம் இருந்த நோட்டீஸை அன்னிக்கு மலைக்கோட்டை ஏரியால உள்ளவங்க கிட்ட கொடுத்தோம். இப்போ பவுல்ராஜ் ஃபாரீன்ல இருக்கான்'' என்றவர், பவுல்ராஜுக்கு போன் போட்டும் கொடுத்தார்.

''பொதுவா இந்த மாதிரி பிட் நோட்டீஸ் கொடுத்தா, வாங்கிப் படிக்காம கீழே போட்டுடுவாங்க. ஆனா, அந்த நோட்டீஸ் ஒண்ணுகூட கீழே விழலை. அவ்ளோ ரெஸ்பான்ஸ். ஆனா, அடுத்த ரெண்டு, மூணு மாசம் எங்க ஏரியா போஸ்ட்மேன்தான் ரொம்ப கஷ்டப்பட்டாரு. எக்கச்சக்கமா லெட்டர்ஸ் வரும். சில பேரு நாங்களும் உங்க முயற்சியில இணைஞ்சிக்கிறோம்னு எழுதி இருப்பாங்க. நிறைய லெட்டர்ஸ் கெட்ட கெட்ட வார்த்தையில திட்டித்தான் வரும். புறம்போக்கு இடம் ஒண்ணை செலக்ட் பண்ணி கட்டலாம்னு ப்ளான் பண்ணினோம். ஆனா, அப்புறம் விட்டுட்டோம். மீடியா எங்களை விடலை. கோயில் கட்டியாச்சு, கும்பாபிஷேகம் பண்ணியாச்சுனு ஏகப்பட்டது கிளப்பிவிட்டாங்க. நாங்களும் படிச்சுச் சிரிச்சுக்குவோம்" என்று சிரிக்கிறார் பவுல்ராஜ்.

'அவங்களை யாராவது அவ, இவனு பேசினாக்கூட விட மாட்டோம். அரசியலுக்கு வந்துட்டாங்க. எலெக்ஷன்ல நின்னா, எங்க தொகுதியில நிக்கச் சொல்லுங்க சார். லட்சம் ஓட்டு வித்தியாசத்துல நாங்க ஜெயிக்க வைக்கிறோம்!'' என்று சவால் விட்டார் பாபு.

குஷ்பு
'After Team lunch...' - டைம்பாஸ் மீம்ஸ்

இன்னொரு முக்கியமான விஷயம், குஷ்பு ரசிகர்கள் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைக்கவில்லையாம். 'அவங்களை மத்தவங்க மரியாதைக் குறைச்சலா பேசினாலே விட மாட்டோம். நாங்களே எங்க குழந்தைக்கு அவங்க பேரு வெச்சிட்டு மரியாதைக்குறைவாக் கூப்பிட்டா, கஷ்டமா இருக்கும்ல... அதான் சார்.' என விளக்கம் தருகின்றனர்!

அவ்ளோ நல்லவங்களாய்யா நீங்க!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com