இயக்குனர் ஹரி
இயக்குனர் ஹரி

தமிழ் சினிமா செய்வது எப்படி? - செஃப் ஹரி

ஊருக்காகவே வாழ்பவரின் மகனையும் ஊருக்கு உபத்திரமாக வாழும் வில்லனின் மகளையும் ஒரே வாணலியில் போட்டு காதல் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
Published on

தேவையான பொருட்கள்:

மதுரை மற்றும் மதுரையைத் தாண்டி தென் தமிழகத்தில் நான்கு மாத லொகேஷன். 37 லாரியில் அருவாள்கள், கத்திகள். 23 ரேஷன் கார்ட்கள் தேவைப்படும் அளவுக்கு ஆட்கள் இருக்கக்கூடிய கூட்டுக்குடும்பமும் ஒரு பெரிய வீடும்.

சூர்யா
சூர்யா

செய்முறை:

சொந்தக்காரர் ஒருவர் மிக மிக நல்லவராகவும், இன்னொருவர் மிக மிக மோசமானவரகவும் இருப்பது மிக மிக மிக மிக அவசியம்.

ஊருக்காகவே வாழ்பவரின் மகனையும் ஊருக்கு உபத்திரமாக வாழும் வில்லனின் மகளையும் ஒரே வாணலியில் போட்டு காதல் வரும் வரை வறுத்து எடுக்கவும்.

விக்ரம்
விக்ரம்

கேட்கவே காது கூசும் பஞ்ச் டயலாக்குகளை அவ்வப்போது தோல்வி காது ஜவ்வு கிழியும் சத்தத்துடன் சேர்த்து கிளறவும். கிளைமாக்ஸ் சண்டையில் 17 அம்பாசிட்டர்களை பறக்க விட்டு தேவையான பதம் வந்ததும் பானையை இறக்கினால் சூடான அரிவாள் படம் ரெடி.

Timepass Online
timepassonline.vikatan.com