தல-தளபதி ரசிகர்கள் சண்டையை நிறுத்துவது எப்படி?

‘தளபதி’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தையே முழுசாக நீக்கிவிட்டு ‘தலபதி’ என்று மட்டுமே சொல்ல வேண்டும் .
அஜித் -விஜய்
அஜித் -விஜய்Timepass

தல-தளபதி ரசிகர்கள் சண்டையை நிறுத்துவது எப்படி? முரட்டுத்தனமாக யோசிச்சதில் கிடைத்த ஐடியாக்கள் சில.

விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்திருந்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை வாரம் ஒருமுறை பார்த்து ரசிகர்கள் ஆக்ரோஷத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

‘அஜித்தும் விஜய்யும் ஒண்ணு; இதை அறியாதவன் மண்ணு’ என்ற மந்திரத்தைத் தாரக மந்திரமாகச் சொல்லி மனதை ஒருநிலைப் படுத்திக்கொள்ளலாம்.

இரண்டு பேருமே வேதாளமாக நடித்தது போல் இவர் ‘நகம்’ என்ற டைட்டில் வைத்தால் அவர் ‘சதை’ என வைக்கலாம். அவர் ‘பில்லி’ என வைத்தால் இவர் ‘சூனியம்’ என வைக்கலாம்.

இவ்வளவு ஏன் விஜய் ‘அஜித்’ என்றும் அஜித் ‘விஜய்’ என்றும் டைட்டில்கள் வைத்துகூட நண்பேன்டா என சூளுரைக்கலாம்.

‘தளபதி’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தையே முழுசாக நீக்கிவிட்டு ‘தலபதி’ என்று மட்டுமே சொல்ல வேண்டும் என ரசிகர்கள் தங்களுக்குள்ளாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

கெஜட்டிலேயே மாற்றி எழுதவும் என்று அரசுக்கு மனு ஒன்றையும் கொடுக்கலாம்.

விஜய் மூன்றெழுத்து அஜித்தும் மூன்றெழுத்து என நீங்கள் சமாதானமாகப் போய்க்கொண்டு இருக்கையில் அஜித்குமார் ஆறெழுத்து என யாராவது கொளுத்திப்போட்டால் ஜோசப் விஜய்யும் ஆறெழுத்துதான் என ரிவென்ஜ் பன்ச் அடித்து கேள்வி கேட்ட வாயில் ஸ்டிக்கர் ஒட்டலாம்.

ஹ்ம்.. இதெல்லாம் நடக்குமா பாஸ் . . ? நம்பிக்கை அதானே எல்லாம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com