நானும் இப்ப வைரமுத்துதான் ப்ரோ

‘‘சூரிய நிலாக்களாய்க் கருகாத தோசை சுடு, கூடவே நெஞ்சு செரிக்கும் கடலைச் சட்னி கொடு!
வைரமுத்து
வைரமுத்துவைரமுத்து
Published on

மடை திறந்த வெள்ளமாய்... பொங்கும் புனலாய் பாட்டு கட்டும் வடுகப்பட்டியார் கவிப்பேரரசு வைரமுத்துவைப்போல ஒருநாள் முச்சூடும் கவித்துவமாய் பேசித்தான் பார்ப்போமே என முயற்சி செய்தேன். (மைண்ட் வாய்ஸ்லதான் பாஸ்!) கேட்பீரே எம்மக்காள்...!

முதல்ல ஓசி பேப்பர் படிக்கும் பக்கத்து வீட்டு பூமிநாதனை மனசுக்குள் திட்டினப்போ...

‘‘ஏ பூமிநாதா! பூமிப்பந்து தன் அச்சில்

சுழல்வதை நிறுத்திக்கொண்டாலும்

கிஞ்சித்தும் அச்சமில்லாமல் அச்சடிச்ச

தாளைக் கேட்கிறாயே...

அது தாள் அல்ல தாள் அல்ல கேள்...

என் ஒரு மாதத்து உதிரம்...

நான் சிறுகச் சிறுக சேமித்த சேகரம்!’’

‘டேய்! என்ன டிபன் செய்யட்டும்?’னு அம்மா கேட்டப்போ...

‘‘சூரிய நிலாக்களாய்க் கருகாத தோசை

சுடு, கூடவே

நெஞ்சு செரிக்கும் கடலைச் சட்னி

கொடு!

கொஞ்சமே கொஞ்சம் புதினா

துவையல் தந்தால், நான்

வாழ்விலும் தட்டிலும் மிச்சம்

வைக்காமல் தின்று செரிப்பேன்!’’

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com