'பாலா உறைவிடப் பள்ளி' - இயக்குனர் பாலா பள்ளி ஆரம்பித்தால் இப்படிதான்!

டீச்சரிடம் அடிவாங்கும்போது, 'நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப் புள்ள...’னு பாடினால், மன்னித்து அடிக்கொடுக்காமல் விடப்படும்.
இயக்குனர் பாலா
இயக்குனர் பாலாடைம்பாஸ்

தமிழ் சினிமாவில் 'அடித்துவமான' இயக்குனர் யார்னு கேட்டா, தயங்காம பாலாவை சொல்லலாம். அப்படிப்பட்ட பாலா தனியா ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சா எப்படி இருக்கும்னு பாப்போம்.

மொத்த ஸ்கூல் பில்டிங்கும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறைகிட்ட இருந்து வாடகைக்கு எடுத்ததுதான். இந்தப் பள்ளியில் அழுக்கா, அகோரமா, ஆண்டியா, எல்லாரையும் பயமொருத்துற மாதிரி வந்தாதான் அட்மிஷனே கிடைக்கும்.

காலை அசம்பிளியில், "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி.." பாடல்தான் அனைவரும் பாட வேண்டும்.

அம்மி கொத்துன மாதிரியோ, ஓவன்ல தலையை விட்ட மாதிரியோ, ஜடாமுனி ஸ்டைலிலோ மட்டும்தான் ஹேர் டிரெஸ்ஸிங் இருக்கணும். அப்படினா, ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படிஷன் எல்லாம் எந்த ரேஞ்சுல இருக்கும்னு பார்த்துக்கோங்க.

தினமும் லங்கர் விளையாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். சிறப்பாக, லங்கர் கட்டை உருட்டுபவர்களுக்கு மண்டை ஓட்டு பொம்மை பரிசாக வழங்கப்படும்.

தொழிற்கல்வியாக, லேகிய/நாட்டு மருத்து வியாபாரம், ட்ரைனில் பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரம் குறித்து பயிற்சிகள் தரப்படும்.

இளங்காற்று வீசும் சமயங்களில், மாணவர்களுக்கு சாப்பிட முழு பலாபழம் கொடுக்கப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை, காசிக்கு இன்ப சுற்றுலா இலவசமாக கூட்டிச் செல்லப்படும்.

தப்பு செய்து டீச்சரிடம் அடிவாங்கும்போது, 'நான் ஆத்தாளப் பார்க்காத சுடுகாட்டுப் புள்ள...’னு பாடினால், மன்னித்து அடிக்கொடுக்காமல் விடப்படும்.

ஸ்போர்ட்ஸ் டே ஃபங்ஷன், ஆனுவல் டே ஃபங்ஷன் எல்லாமே சுடுகாட்டு க்ரவுண்டுலதான் நடக்கும். அதுக்காக ஃபங்ஷனோட க்ளைமேக்ஸ்ல, சங்க கடிக்கிற போட்டி வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கக் கூடாது.

மாணவர்களை அடிக்கக் கூடாதுங்கிற சட்டம் எல்லாம் இங்கே 'மீறப்படும்'. அடியாத மாடும் ஒடியாத கொம்பும் ஒண்ணுத்துக்கும் உதவாது. - இதுதான் இங்கே தாரக மந்திரம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com