பேய் இருக்கோ, இல்லையோ... அப்படியே பேய் இருந்து அதுங்களுக்குத் தனியா ஃபேஸ்புக் பக்கமும் இருந்தால்...?
என்னதான் பேயா இருந்தாலும் அதுங்களுக்கும் ஃபேக் ஐ.டி நிச்சயம் இருக்கும். அந்த பேய் ஃபேக் ஐ.டி ப்ரொஃபைல் ஒரு மனித முகமாதான் இருக்கும். பின்னே என்னங்க... நாம் ஃபேக் ஐ.டி-யில் பூ, வண்ணத்துப்பூச்சி, நடிகைகளின் ப்ரொஃபைல் போட்டோ வைக்கிறது இல்லையா?
நம் ஆட்கள் தல, தளபதி ரசிகர்களாகப் பிரிஞ்சு அடிச்சுக்கிட்டு அசிங்கப்படுற மாதிரி பேய்கள் இருக்காது. எல்லாப் பேய்களும் ராகவா லாரன்ஸ் ரசிகர்களாதான் இருக்கும்!
‘பிசாசு’ படம் மாதிரி பாசமான பேய்களும் உண்டு. ‘முனி’ பட பழி வாங்குற பேய்களும் உண்டு.
டைம்லைன் செட்டிங்க்ஸ்ல நமக்கு டேட் ஆஃப் பர்த் மாதிரி அதுங்களுக்கு டேட் ஆஃப் டெத்துதான் முக்கியம். அதை வெச்சுதான் சீனியர் பேய், ஜூனியர் பேய் முடிவு செய்யப்படும். அதைவிட முக்கியம் செத்துப்போன இடம் மற்றும் செத்த விபரம்!
காற்றில்லாத இடத்திலும் காதல் உண்டே. பேய் மட்டும் விதிவிலக்கா என்ன? நாம் போடும் மொக்கை காதல் கவிதைப் பதிவுகளைப் போல அங்கும் உண்டு. ‘என்னை எரித்த சுடுகாட்டிலா நீ எரிந்தாய்’, ‘காலே இல்லாவிட்டாலும் காதல் உண்டு’னு செம ஃபீலிங் காட்டும் காதல் பேய்கள்!
இந்தியப் பேய்கள், அமெரிக்கப் பேய்கள் வித்தியாசம் இங்கில்லை. எல்லாப் பேய்களுமே இரவுகளில் மட்டுமே ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும்!
மனித வாழ்க்கையைப் பற்றி உயர்வாக ஸ்டேட்டஸ் போட்டால் செத்துச்சி அந்தப் பேய். மற்ற பேய்கள் எல்லாம் அதன் பேஜில் சென்று அசிங்கமாகத் திட்டும்!
தப்பித்தவறிப் பேய்களின் போஸ்ட்டை மனிதர்களின் ஃபேஸ்புக் பேஜில் டேக் பண்ணும் நிலை வந்துவிட்டால் அவ்ளோதான். ஷேர் பண்ணலைனா ரத்தம் கக்கிச் சாவீங்க பக்கிகளா!