HBD Amala Shaji : Instagram to ரசிகர் மன்றம் வரை - குட்டி நயன்தாராவான அமலா ஷாஜியின் வெற்றிக் கதை !

'தலைவி', 'ஜீனியர் நயன்தாரா', 'சமூக ஊடக சூப்பர் ஸ்டார்' என்று இன்றைய இளைஞர்களால் கொண்டாடப்படும் அமலா ஷாஜியின் பிறந்தநாள் தான் இன்று. ஒரு இளைஞர் அமலாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்.
Amala Shaji
Amala Shaji timepass

திரையில் வரும் பிரபலங்களுக்கு இணையான ரசிகர் பட்டாளம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரபலங்களுக்கும் இருக்கிறது. திறமையுள்ள அனைவரையும் மக்கள் கொண்டாடத் தயாராகவே உள்ளனர். அந்த வகையில்  'தலைவி' என்றும் 'ஜீனியர் நயன்தாரா' என்றும் 'சமூக ஊடக சூப்பர் ஸ்டார்' என்றும் இன்றைய இளைஞர்களால் கொண்டாடப்படும் அமலா ஷாஜியின் பிறந்தநாள் தான் இன்று...

இருபத்தி ஒன்று வயதேயான அமலா ஷாஜி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர் டிக்டாக் செயலி முடக்கத்திற்கு பின் இன்ஸ்டாகிராமில் தஞ்சம் புகுந்தார். அமலாவின் வட்ட முகமும் அழகான பல் வரிசையும் அவரின் இயல்பான நடிப்பும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

அதனை தொடர்ந்து அவரின் செல்வாக்கு உயர தொடங்கியது. தற்பொழுது இன்ஸ்டாகிராமில் 4.1 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர். இந்த எண்ணிக்கை திரைத்துறையில் பயணிக்கும் சில நடிகைகளை விட அதிகம். இவர் கேரளாவை சார்ந்தவர் என்றாலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம் தமிழகத்தை சார்ந்தவர்கள். மதுரை அமலா ரசிகர் மன்றம் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கி சென்ற ஆண்டு இவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு இவர் வருகிறார் என்ற செய்தி தெரிந்தால் அங்கு இளைஞர் பட்டாளம் கட்டுக்கடங்காமல் கூடிவிடுவது வழக்கமாகி வருகிறது. இவரின் புகைப்படம் ஒட்டப்பட்ட வாகனங்கள், ஓவியம் தீட்டப்பட்ட வாகனங்கள்  தமிழகத்தில் உலா வருவதை காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று ஒரு இளைஞர் அமலாவின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். அமலா ஷாஜி பல தனியார் நிறுவனங்கள் மூலம் பல விருதுகளை பெற்று இருக்கிறார்.

இந்த சிறு வயதில் பல இடங்களுக்கு சிறப்பு அழைப்பாளராகவும் செல்கிறார். சமூக ஊடகங்களில் ஆபாசமும், அசிங்கமும் உச்சத்தில் இருந்த நேரத்தில் கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீயூமர், கொஞ்சம் ஆட்டம், கொஞ்சம் பாட்டம் என தரமான வீடியோக்கள் மூலர் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். இவரின் ஒவ்வொரு வீடியோக்களிலும் க்யூட்னஸ் ஓவர்லோடு ஆகி வருகிறது என்று ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இவரின் குந்தவை கெட்அப் ஆனது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. அதன் பின் இணைவாசிகளால் அவர் 'மக்கள் செல்வி' என்று அழைக்கப்படுகிறார்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்தப் படத்தில் அமலாவின் தரிசனம் கிடைக்கவில்லை. இரண்டு மாநில 2K கிட்ஸ்களின் இணைப்பு மொழியாக அமலா ஷாஜி திகழ்கிறார். எது எப்படியோ இந்த இளம் வயதில் தன் யதார்த்த நடிப்பால் பல இலட்ச ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டு புகழின் உச்சியில் இருக்கும் குட்டி நயன்தாராவிற்கு நீங்களும் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லலாமே பிரண்ட்ஸ்...

- முகமது முஸாம்மில்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com