'10 நாளில் 10 மில்லியன் வியூஸ்' - கேரளாவைக் கலக்கும் குடிமகனின் ஆட்டம்

ஒரு மெலோடி பாட்டு எப்படி டான்ஸ் மூவ்மெண்ட்டுக்காக இப்போ ஹிட்டானுச்சுனு தெரிஞ்சுக்கணுமா..?
இன்னா தான் கேஸ் கொடு
இன்னா தான் கேஸ் கொடுடைம்பாஸ்
Published on

மலையாள சினிமாவில்... அதாங்க நம்ம மல்லுவுட்ல அப்பப்போ சில பாடல்கள் ட்ரெண்டிங்ல கில்லியடிக்கும். இப்ப அப்படியொரு பாட்டு அதிரிபுதிரி ஹிட்டாகி கேரளத்தையே ஆட்டுவிக்கிது. ஆளாளுக்கு அந்தப்பாட்டுக்கு மூவ்மெண்ட்ஸ் போட்டு சோஷியல் மீடியாவை நிரப்புறாங்க.

இதுக்கு முன்னாடி 'ஜிமிக்கிக் கம்மல்' பாட்டு தமிழ்நாட்டு காலேஜ் கல்ச்சுரல்ஸ் வரை இறங்கி அடிச்சுச்சு. இப்ப ஹிட்டாகி இருக்கும் 'தேவதூதர் பாடி...' என்ற பாட்டு புதுசான பாட்டும் கிடையாது.

1985-ல் ரிலீஸான 'காதோடு காதோரம்' என்ற மம்மூட்டி- சரிதா நடிச்ச படத்தில் இடம்பிடித்த பாடல் அது. கிறிஸ்த்துவ சுவிசேஷ பாட்டு போல இருக்கும் அந்தப் பாட்டு மெலோடியும் கூட! பாடலைப் பாடியது கே.ஜே.யேசுதாஸ் மற்றும் லத்திகா. இசை ஔசேப்பச்சன்.

ஒரு மெலோடி பாட்டு எப்படி டான்ஸ் மூவ்மெண்ட்டுக்காக இப்போ ஹிட்டானுச்சுனு தெரிஞ்சுக்கணுமா..?

வர்ற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாகப்போகும் 'இன்னா தான் கேஸ் கொடு'னு ஒரு படத்தில் மேடையில் இந்தப் பாடலை ஆர்கெஸ்ட்ரா குழு பாட்டுப் பாட, கீழே சரக்கடிச்ச குடிமகன் ஒருத்தர் அழுக்கு சட்டை கைலியில் நிறைபோதையில் ஆட்டத்தைப் போடுற மாதிரி சீன் வருது.

அந்த குடிமகன் ரோல்ல தத்ரூபமா நடிச்சிருக்காரு மல்லுவுட் ஹீரோ குஞ்சாக்கோ போபன்! ஆமாங்க.

இவர் அந்த ஊர் இளைய தளபதி. 'காதலுக்கு மரியாதை' ஒரிஜினல் வெர்ஷன் 'அனியத்துப் புறாவு' படத்தில் ஷாலினிக்கு ஜோடியா நடிச்சு ஒரே படத்துல 'சாக்கோச்சன்' என கொண்டாடப்பட்டவர்.

இப்ப குஞ்சாக்கோ தயாரிச்சு ஹீரோவா நடிச்ச இந்தப் படத்துல ந்தப் பாட்டும் அவர் கொடுத்த மூவ்மெண்ட்டும்தான் கேரளா தாண்டி வைரலாகி இருக்கு.

ஒரிஜினல்ல நடிச்சிருந்த மம்மூட்டியே, 'என் பாட்டை காலம் கடந்து ஹிட்டாக்கி இருக்கும் படக்குழுவுக்கும் ஹீரோ குஞ்சாக்கோவுக்கும் நன்றி'னு சோஷியல் மீடியால நெகிழ்ச்சியா சொல்லியிருக்காருன்னா பார்த்துக்கங்க.

மம்மூட்டியின் மகன் ஹீரோ துல்ஹர் சல்மான், அவர் புதுசா நடிச்ச 'சீதா ராமம்' படத்தோட புரொமோஷன்ல குஞ்சாக்கோ ஆடிய அதே மூவ்மெண்ட்டுகளைப் போட்டு தான் அப்ளாஸ் அள்ளினார்.

இப்ப மலையாளிங்க ஆளாளுக்கு 'தேவதூதர் பாடி' பாட்டை ரீல்ஸ் போட்டு ஹிட்ஸ் அள்ளுறாங்க.

நீங்களும் ஒருவாட்டி வீட்டுல தனியா இருக்குறப்போ அந்தப் பாட்டைப் பார்த்து குஞ்சாக்கோ ஸ்டெப்ஸை ட்ரை பண்ணுங்க!

லின்க்: https://www.youtube.com/watch?v=QqkdiLBBOuM

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com