Spiderman
Spidermantimepass

Spiderman : ஒரே இடத்தில் கூடிய 1000 ஸ்பைடர் மேன்கள் - Marvel ரசிகர்களின் புது சாதனை !

இந்த நிகழ்வில் ஒரு பங்கேற்பாளர் ஸ்பைடர் மேன் உடையை நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகள் கொண்ட அர்ஜென்டினா கால்பந்து ஜெர்சி வடிவில் அணிந்திருந்தார்.
Published on

அர்ஜென்டினா தலைநகரான ப்யூனஸ் அயர்ஸில் உள்ள புகழ்பெற்ற தூபி நினைவுச்சின்னத்தில் அருகே சுமார் 1000 பேர் ஸ்பைடர் மேன் உடையணிந்து வந்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் 685 பேர் ஸ்பைடர் மேன் உடையணிந்து வந்த ஒன்றுக்கூடிய நிகழ்வை முறியடிக்கும் நோக்கில், மார்வெல் சூப்பர் ஹீரோவாக உடையணிந்து உலக சாதனையை செய்துள்ளனர்.

அர்ஜென்டினாவின் செல்வாக்குமிக்க உகி டீன் (Uki Deane) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில், ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ உருவாக்கிய ஸ்பைடர் மேன் போல் உடையணிந்த மக்கள் அனைவரும் ஒன்றாக மதிய நேரத்தில் கைதட்டி நல்ல உற்சாகத்துடன் பாட்டு பாடினர். இந்த நிகழ்வில் ஒரு பங்கேற்பாளர் ஸ்பைடர் மேன் உடையை நீலம் மற்றும் வெள்ளைக் கோடுகள் கொண்ட அர்ஜென்டினா கால்பந்து ஜெர்சி வடிவில் அணிந்திருந்தார்.

இது குறித்து பேசிய உகி டீன், "நான் முதலில் 700 பேரை வரவழைக்க விரும்பினேன். ஆனால், நாங்கள் நினைத்ததை விட சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். மேலும், ஸ்பைடர் மேன் ஒரு கற்பனை என்றாலும், அக்கதாபாத்திரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எங்கள் கோரிக்கைக்கு கின்னஸ் உலக சாதனை இன்னும் பதிலளிக்கவில்லை. இருப்பினும் அமைப்பாளர்கள் பங்கேற்பாளர்களிடம் கையொப்பங்களை பெருமாறு கூறினோம். அதன்படி, இதுவரை சுமார் 1000 கையெழுத்துகள் உள்ளன. சில புகைப்படத்தை கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு வழங்க ஆவணமாக எடுத்து வைத்துள்ளோம்" என்று கூறினார்.

- மு.குபேரன்.

Spiderman
IND vs AUS : 'Sachin இதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட' - Dennis Lilleev| ThugLife Cricketers
Timepass Online
timepassonline.vikatan.com