'இதான்ங்க படத்தோட ஒன் லைன்' - டைரக்டர்ஸ் வெர்ஷன்

பாலா : மூனு வருஷம் எண்ணெய் வைக்காத தலையும் அவன் கடிக்கிறதுக்கு ஒரு கொரவளையும். பேரரசு : ஒரு ஊர்ல ஒரு ஹீரோ, அவன் பேருக்குள்ளயே இருக்கு ஒரு ஊரு.
'இதான்ங்க படத்தோட ஒன் லைன்' - டைரக்டர்ஸ் வெர்ஷன்

சினிமால ஒன் லைன்ற வார்த்தைய அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஒருவேள நம்ம இயக்குனர்கள் எல்லாம் ஒன் லைன்ல ஹீரோக்கள்ட கதை சொன்னா எப்டி இருக்குனு பாப்போம்.

வெங்கட் பிரபு : ஒரு ப்ரெண்ட்ஸ் கேங், அதுல என் தம்பியும் ஒரு ஆளு.
செல்வராகவன் : ஒரு தறுதலை ஹீரோ அவன திருத்துற ஹீரோயின்.

மிஷ்கின்
மிஷ்கின்

கௌதம் மேனன் : வாட்ட சாட்டமான ஹீரோவுக்கு பின்னாடி ஒரு வாய்ஸ் ஓவர்.


மிஷ்கின் : ராத்திரில நடக்குற ஹீரோவுக்கு ரெண்டே ரெண்டு காலு.
பொன்ராம் : சிவகார்த்திகேயன்ற ஒரு ஹீரோவுக்கு சூரிங்குற ஒரு ப்ரெண்ட் இருக்கான்.

சிறுத்தை சிவா: செகண்ட் ஆப்ல கல்கத்தா போற ஹீரோ.
பாலா : மூனு வருஷம் எண்ணெய் வைக்காத தலையும் அவன் கடிக்கிறதுக்கு ஒரு கொரவளையும்.
பேரரசு : ஒரு ஊர்ல ஒரு ஹீரோ, அவன் பேருக்குள்ளயே இருக்கு ஒரு ஊரு.

பேரரசு
பேரரசு

ஹரி : நல்லவனான ஹீரோவுக்கு நாலடியில் ஒரு அருவாவும் வீட்டு வாசல்ல 13 அம்பாசிட்டர் இருக்கும்.
டி.ராஜேந்திரன் : தாடியையும் தங்கச்சியையும் உயிரா நினைக்கிற ஹீரோ.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com