இந்த 'நாடோடி' நடிகரை ஞாபகம் இருக்கா? - அஜய் கிருஷ்ணா

இந்தக் கேரக்டர்ல உனக்கு டயலாக்கே கிடையாது. இதுல நீ பேசவே மாட்ட ரிலீஸுக்கு அப்பறம் பாரு ஊரே உன்னைப்பத்திதான் பேசனும்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அது நடந்துச்சு.
அஜய்
அஜய் டைம்பாஸ்

சில நடிகர்கள் படம் முழுக்க வந்தாலும் ஆடியன்ஸ் மனசுல நிக்க மாட்டாங்க. ஆனா, ஒருசிலர் ஒரு சில சீன்ல வந்தாலும் பச்சக்னு ஒட்டிக்குவாங்க அப்படி ஒருத்தர்தான் அஜய் கிருஷ்ணா. 'நாடோடிகள்' படத்துல சசிகுமாரின் நண்பனா காதல் ஜோடியை சேர்த்து வைக்கிற கேரக்டர்ல நடிச்சிருப்பார். யாருப்பா அந்த மஞ்ச சட்டைனு அப்பவே கவனிக்க வைத்தவருடன் ஒரு ஜாலியான சந்திப்பு

"சிவகங்கை பக்கத்துல பாகனேரிங்கிற கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். அங்கே இருந்து இங்கிலாந்து போய் மரைன் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்சிட்டு அங்கேயே கப்பல்ல டெக்னீஷியனா வேலை பார்த்தேன். கப்பல் வேலையில உலக நாடுகளை சுத்தி வர சான்ஸ் கிடைக்கும். அப்படி 50  நாடுகளுக்கு மேல நான் போயிருக்கேன். நான் பார்த்ததுல பெரு, சிலி, ஆஸ்திரேலியா எனக்குப் பிடிச்ச நாடுகள். கப்பல் வேலைனா எல்லாருக்கும் சேதுபதி ஐ.பி.எஸ் கவுண்டமணி காமெடிதான் ஞாபகத்துக்கு வரும். நாங்க போன கப்பல் கூட நிஜமாவே நடுக்கடல்ல நின்னிருக்கு. ஆனா, அதை இறங்கி தள்ள வேண்டிய அவசியம் எல்லாம் வராது. டெக்னிக்கல் பிரச்னைகள் இருக்கும். அதை கப்பலுக்கு உள்ளே இருந்தே சரிபண்ணிடுவோம்"

அஜய்
'அப்டியே திருமாவளவன் மாதிரி இருக்காரே' - பண்ருட்டி ரமேஷ் பேட்டி

கப்பல் வேலையை விட்டுட்டு எப்படி நடிக்க வந்தீங்க ?

"நடிக்கப் போறேன்னு சொன்னதும் முதல்ல வீட்டில் திட்டத்தான் செஞ்சாங்க. நல்ல சம்பளம் வர்ற வேலையை விட்டா திட்டத்தானே செய்வாங்க. அப்பறம் ஒரு கட்டத்துல ஏதோ செஞ்சுட்டு போன்னு என் போக்குல விட்டுட்டாங்க."

"சமுத்திரக்கனி சார் ஏற்கனவே எனக்கு நல்ல பழக்கம். அவரை அடிக்கடி போய் பார்ப்பேன். அவரை பாக்கும்போதெல்லாம் "கொஞ்சம் வெயிட் பண்றா பெருசா பண்ணலாம்"னு சொல்வார். ஒருநாள் திடீர்னு எனக்கு போன் வந்துச்சு. "சமுத்திரக்கனி சார் உங்களை வரச் சொல்றாரு"ன்னு கூப்பிட்டாங்க. போனதும்தான் தெரிஞ்சது அது 'நாடோடிகள்' படத்தோட ஷூட்டிங்னு. கனி சார் என்கிட்ட "நாளைக்கு உனக்கு ஷூட் இருக்கு வரும்போது மஞ்சக்கலர் சட்டை போட்டுட்டு வா"னு சொன்னார்.

அடுத்தநாள் போனேன். ஒரு யமஹா வண்டியை கொடுத்து சசிகுமார் சார பின்னாடி வெச்சு ஓட்டச் சொன்னார். இந்தக் கேரக்டர்ல உனக்கு டயலாக்கே கிடையாது. இதுல நீ பேசவே மாட்ட ரிலீஸுக்கு அப்பறம் பாரு ஊரே உன்னைப்பத்திதான் பேசனும்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அது நடந்துச்சு. இப்போகூட கிராமங்களுக்கு போறப்ப "அண்ணே நாடோடிகள்ல நடிச்சது நீங்கதானே அந்த பைக் இப்பவும் வச்சிருக்கீங்களா?"னு கேட்பாங்க."  

அஜய்
'வசூல் ராஜா' பிரகாஷ் ராஜ் போல வாழும் மனிதர்' - சிரிப்பானந்தா பேட்டி

நாடோடிகள்ல காதல் ஜோடியை சேர்த்து வெச்ச மாதிரி நிஜத்துல சேர்த்து வெச்ச அனுபவம் இருக்கா ?

"படம் பார்த்த நிறைய பேர் நான் நிஜத்துலயும் லவ்வர்ஸ சேர்த்து வைப்பேன்னு நம்பிட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தன் ஹோட்டல்ல வேலை பாக்குறான்.

"ஒருநாள் என்கிட்ட வந்து "அண்ணே  நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் நீங்கதான் எங்களை சேர்த்து வைக்கணும். அவகிட்ட சொல்லிருக்கேன். நாடோடிகள் அண்ணன் நம்ம கூட இருக்காரு அவர் பார்த்துப்பார்னு. ஏதாவது பண்ணுணே"னு வந்து நின்னான். அதே மாதிரி நிறைய நண்பர்கள் போன் பண்ணி "ஒரு லவ் பிரச்சனை நீ வந்திருவேல மச்சான்?"னு உரிமையா கேட்பாங்க. அவங்களுக்கு என்னால முடிஞ்ச அளவு  சின்னச் சின்ன ஹெல்ப் பண்ணிருக்கேன். ஆனா யாரையும் கூட்டிட்டு போய் சேர்த்து வெச்சது எல்லாம் கிடையாது."

அஜய்
'குடிகாரர்கள் குழந்தை மாதிரினு யார் சொன்னா?' - குடிகாரன் யூசப் பேட்டி

இப்போ என்னென்ன படங்கள் பண்றீங்க ?

"நாடோடிகளுக்கு அப்பறம் சில படங்கள் பண்ணினேன். எதுவும் நாடோடிகள் அளவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கல. அதுக்காக நான் சோர்ந்து போகவும் இல்ல தொடர்ந்து வாய்ப்புகள் தேடிட்டு இருக்கேன். 'காடப்புறா', 'கட்டம்போட்ட சட்டை', 'அனுக்கிரகம்'னு இப்போ மூணு படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒருநாள் சினிமாவில் எனக்குன்னு ஒரு இடத்தை பிடிப்பேன். நம்பிக்கை இருக்கு." என்கிறார் அஜய் கிருஷ்ணா.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com