Leo
Leotimepass

Leo OTT : 5 மொழிகளில் வெளியாகும் லியோ - வெளியீட்டு தேதியை அறிவித்த Netflix !

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவில் மட்டும் முன்னதாகவே வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.
Published on

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் பல சாதனைகளை படைத்தது. லோகேஷ் கனகராஜ் தந்த பேட்டி, வசூல் கணக்கில் உள்ள குழப்பம், சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு என படம் வெளியான பின் சர்ச்சைகளும் அதிகம் இருந்தது.

திரையரங்களில் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நாளுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், பட வெளியீட்டிற்கான தேதியை ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 24 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இந்தியாவில் மட்டும் வெளியாகவுள்ளது. அதைத் தொடந்து, ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Leo
Vijay Politics : MGR போல வெற்றி பெறுவாரா, Sivaji போல் தோற்றுப்போவாரா?
Timepass Online
timepassonline.vikatan.com