'பனைமட்டைனு சேனலுக்கு ஏன் பேரு வச்சோம் தெரியுமா?' - பனைமட்டை டீம் நேர்காணல்

யூ-டியூபில் தினமும் புதுப்புது காமெடி சேனல்கள் வந்துக்கிட்டே இருக்கு. அதில் அதிகம் பேரால் கவனிக்கக் கூடிய சேனலா மாறியிருக்கு பனைமட்டை.
பனைமட்டை
பனைமட்டைபனைமட்டை
Published on

யூ-டியூபில் தினமும் புதுப்புது காமெடி சேனல்கள் வந்துக்கிட்டே இருக்கு. அதில் அதிகம் பேரால் கவனிக்கக் கூடிய சேனலா மாறியிருக்கு பனைமட்டை. இதில் நடிக்கும் பசங்க தேவகோட்டை, பரமக்குடி பக்கம் ஏதோ ஒரு கிராமம்னுதான் இவ்ளோநாளா நான் நினைச்சிட்டு இருந்தேன். கடைசில பார்த்தா சென்னை குன்றத்தூர்லதான் இவங்க இருந்திருக்காங்க.

அந்தச் சேனலை உருவாக்கி ஹிட்டடிக்க வெச்ச R.S.ராஜாவையம் அவருடைய டீமையும் ஒட்டுமொத்தமா சந்தித்து பேசியதில்,

என் பெயர் R.S.ராஜா ஆனா, பனைமட்டை ராஜான்னுதான் இப்போ எல்லாரும் கூப்பிடுறாங்க. ஆரம்பத்துல டிக்டாக்ல சும்மா விளையாட்டுக்கு வீடியோ பண்ணிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டு பக்கத்து வீட்டு பசங்க ஆர்வமா வீடியோ பண்ண வந்தாங்க, அப்படியே ஒரு டீமா சேர்ந்து பட்டய கிளப்ப ஆரம்பிச்சிட்டோம்.

மதுரை முத்து அண்ணன் வாய்ஸ்ல பண்ணின வீடியோக்கள் பெரிய ஹிட்டாச்சு. அப்பறம் அவர் சொந்தமா யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சிட்டார். அதனால அவர் வாய்ஸ விட்டுட்டு தமிழ் படங்களை கலாய்ச்சு வீடியோ பண்ண ஆரம்பிச்சோம். இப்போ அதையும் விட்டுட்டு சொந்தமா ஸ்கிரிப்ட் எழுதி வீடியோ பண்ணிக்கிட்டு இருக்கேன். யூ-டியூப்ல பேமஸானதும் படத்துல நடிக்க பசங்கள கூப்பிடுறாங்க.

4 படத்துல நடிச்சிட்டும் வந்துட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் இந்த யூ-டியூப்தான் என்றவரிடம்"சேனலுக்கு ஏன் பனைமட்டைனு பேர் வெச்சீங்க?" என்றேன். ஒருமுறை பனைமரத்துக்கு அடியில நின்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒரு பனை ஓலை மட்டை கீழே விழுந்துச்சு அதை பார்த்துட்டு இதையே சேனலுக்கு பேரா வைக்கலாமேன்னு ஒரு ஸ்பார்க் தோணுச்சு அப்படி திடீர்னு வெச்சதுதான் இந்த பனைமட்டைங்கிற பேரு.

அடுத்து பனைமட்டையின் முக்கியமான தலக்கட்டு அகஸ்டின் ஆரம்பித்தார். "பத்தாவது வரைக்கும் படிச்சேன். அப்பறம் வீட்ல சும்மாதான் இருந்தேன். ராஜா அண்ணன் வீடியோ பண்றதை பார்த்துட்டு எனக்கும் ஆர்வமாகிடுச்சு. அவர்கூட சேர்ந்துக்கிட்டேன்.

நான் நடிக்கிற வீடியோவை எங்க வீட்லயும் பார்ப்பாங்க. "நல்லா நடிக்கிறடா"னு சொல்லி அம்மா சிரிப்பாங்க. முன்னாடிலாம் நான் வெளிய போனா யாருக்கும் என்னைத் தெரியாது. இப்போ கடைக்கு கடலைமிட்டாய் வாங்கப் போனா கூட கண்டுபிடிச்சிடுறாங்க என்கிறார் அகஸ்டின்.

அடுத்து பெரியவர் சம்பத் ஸ்டார்ட் பண்ணினார். "நான் ஒரு விவசாயி தம்பி. ஒருநாள் எதேச்சையா ரோட்ல போய்க்கிட்டு இருந்தேன். அப்போ ராஜா தம்பி கூப்பிட்டுச்சு, என்னனு கேட்டேன். இந்த டயலாக் சொல்லிட்டு போறியா பெருசுன்னு சொல்லுச்சு அப்படித்தான் நான் இதுக்குள்ளே வந்தேன்.

நடுவுல கொஞ்சநாள் நான் வீடியோ எதுவும் நடிக்கல பாக்குறவங்க எல்லாம் ஏன் நடிக்கலேன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ராஜா தம்பி ஒருவாட்டி திட்டிடுச்சுஅந்தக் கோவத்துலதான் நான் அப்படி நடிக்காம இருந்தேன். அப்பறம் திரும்ப வந்து சேர்ந்துட்டேன். இதான் தம்பி என் கதை" என்கிறார் சம்பத்.

கலக்குங்க...!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com