
சினிமா படங்களைத் தாண்டி நிறைய விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். முக்கியமாக, சச்சின் டெண்டுல்கர் நடித்த எம்.ஆர்.எஃப் விளம்பரத்தை இயக்கியவரும் பிரதாப் போத்தனே.
தமிழில் எப்போதாவது நடித்து வந்தாலும், மலையாளத்தில் சமீபமாகக் குறிப்பிட்டளவு படங்களில் நடித்துவந்தார். அதனால், அடிக்கடி கேரளாவிற்கு சென்று தனது பண்ணை வீட்டில் தங்குவார்.
இயக்கம், நடிப்பு தாண்டி, சமையலில் அதிகம் ஈடுபாடுள்ளவர். விதவிதமாக சமைத்து, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வந்தார்.
பிரதாப் போத்தனின் முக்கிய படமான வெற்றிவிழா திரைப்படம், ஹாலிவுட் படத்தின் காப்பி என சர்ச்சை எழுந்தது.
ஆனால், அதை மறுத்த பிரதாப் போத்தன், "வெற்றிவிழா படம் Bourne Identity என்ற அமெரிக்க நாவலின் தாக்கத்தால்தான் எடுத்தேன், 2000களுக்கு பின்தான்,அவர்கள் சொல்லும் அந்த ஹாலிவுட் படம் வந்தது" என்று விளக்கமிளித்தார்.